OnePlus Nord 2 5G இந்தியாவில் விற்பனை; என்ன விலை, என்ன சலுகை
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் இந்திய விற்பனை தற்போது அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் வலைத்தளத்தில் நேரலையாக உள்ளது.
OnePlus Nord 2 5G: ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி இந்தியாவில் ஜூலை 26 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் வலைத்தளத்தில் நேரலையாக உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி (OnePlus Nord 2 5G) தற்போது ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி (OnePlus Nord CE 5G) மாடலுக்கு பிறகு நாட்டில் வெளியாகி உள்ள ஒன்பிளஸ் நோர்ட் வரிசையில் மூன்றாவது மாடலாகும். அமேசான் ப்ரைம் (Amazon Prime) சந்தா மற்றும் ஒன்பிளஸ் ரெட் கேபிள் உறுப்பினர்கள் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி மாடல்களை அமேசான் மற்றும் ஒன்பிளஸ்.இன் வழியாக வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் தற்போது ப்ளூ ஹேஸ் மற்றும் கிரே சியரா வண்ணங்களில் வருகிறது.
ALSO READ | OnePlus Nord CE 5G: OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்
OnePlus Nord 2 5G விலை மற்றும் விற்பனை சலுகைகள்
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி 6ஜிபி + 128ஜிபி ரூ.27,999க்கும், 8ஜிபி + 128ஜிபி ரூ.29,999க்கும் மற்றும் 12ஜிபி + 256ஜிபி ரூ.34,999க்கும் வருகிறது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மாடலை HDFC வங்கி கிரெடிட் கார்டுகளில் வாங்கினால் மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு நோ காஸ்ட் EMI விருப்பங்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடியில் கிடைக்கும்.
கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும், HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 2 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் வழங்கும். ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் பொது விற்பனை அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் பிற சில்லறை சேனல்கள் வழியாக இன்று முதல் நடக்கிறது.
ALSO READ | Smartphones List: இந்த வாரம் அறிமுகமாகும் TOP ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ
OnePlus Nord 2 5G அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
இந்த ஸ்மார்ட்போனில் டேப்லெட் வடிவ கேமரா ஹம்பிற்கு மாறாக பெரிய பின்புற கேமரா ஹவுசிங்ஸ், 6.43 இன்ச் அளவிலான டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் போன்றவற்றை கொண்டுள்ளது. டிஸ்பிளே AMOLED பேனலை அடிப்படையாகக் கொண்டது. Full HD பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.
இதில் மீடியா டெக் டைமன்சிட்டி 1200-AI சிப் உள்ளது. மேலும் இதில் 3 ரேம் / ஸ்டோரேஜ் விருப்பங்களைத் தேர்வுசெய்கிறது. 6 ஜிபி / 128 ஜிபி மாடல், 8 ஜிபி / 128 ஜிபி மாடல் மற்றும் 12 ஜிபி / 256 ஜிபி உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சார் மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, ஈஐஎஸ் உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மல்டி ஆட்டோஃபோகஸ், 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் பயன்முறை, நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வருகிறது.
இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 கொண்டு இயங்குகிறது. இது டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2 மற்றும் பலவற்றை கொண்டுள்ளது.
ALSO READ | இவையே புதிய மற்றும் வரவிருக்கும் அற்புதமான 5G தொலைபேசிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR