Smartphones List: இந்த வாரம் அறிமுகமாகும் TOP ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ

ஒவ்வொரு நாளும் சந்தையில் புதிய Smartphones அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் ஒரு தொலைபேசியை வங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நிச்சயமாக இந்த பட்டியலைப் பாருங்கள். இந்த வாரம் 4 தொலைபேசிகள் அறிமுகம் ஆகிறது. அவற்றின் முழு விவரத்தையும் இங்கே காண்க.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 11:36 AM IST
Smartphones List: இந்த வாரம் அறிமுகமாகும் TOP ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ title=

புதுடெல்லி: ஒவ்வொரு நாளும் சந்தையில் புதிய Smartphones அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் ஒரு தொலைபேசியை வங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நிச்சயமாக இந்த பட்டியலைப் பாருங்கள். இந்த வாரம் 4 தொலைபேசிகள் அறிமுகம் ஆகிறது. அவற்றின் முழு விவரத்தையும் இங்கே காண்க.

Infinix Note 10 Series
Infinix தனது ஸ்மார்ட்போன் வரிசையை இந்தியாவில் விரிவுபடுத்தி ஜூன் 7 ஆம் தேதி தனது புதிய Infinix Note 10 Series அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரின் கீழ் Infinix Note 10 மற்றும் Infinix Note 10 Pro ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். 

ALSO READ | POCO M3 Pro அறிமுகம், அசத்தலான பட்ஜெட் 5G போன்

Poco M3 Pro
ஜூன் 8 ஆம் தேதி, நிறுவனம் தனது Poco M3 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும். இந்த தொலைபேசி பயனர்களுக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்தியா போர்ட்ஃபோலியோவில் முதல் 5 ஜி தொலைபேசி இது என்று நிறுவனம் கூறுகிறது. நினைவுகூர, Poco M3 Pro மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

iQoo Z3 5G
iQoo இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போனையும் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வருகிறது, இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி, நிறுவனம் iQoo Z3 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன சந்தையில் iQoo Z3 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த தொலைபேசியின் இந்திய மாறுபாட்டில் பெரும்பாலான விவரக்குறிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Nord CE 5G
OnePlus அதன் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் OnePlus Nord மேம்படுத்தப்பட்ட பதிப்பான OnePlus Nord CE 5G Mobile ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. தொலைபேசியின் பெயரில் CE என்பது கோர் பதிப்பு என்று பொருள். OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்ஷன் 1200 சிப்செட் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.

ALSO READ | Vivo V21 5G: உலகின் முதல் 44MP OIS செல்ஃபி காமரா போனில் பம்பர் தள்ளுபடி, முந்துங்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News