OnePlus Nord CE 5G: OnePlus தனது மலிவான ஸ்மார்ட்போனான OnePlus Nord CE 5G ஐ ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5 ஜி, ஸ்ட்ராங் கேமரா மற்றும் சிறந்த ப்ரோசெசர் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. இது ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸில்  ஒரு புதிய மொபைல் போன் இருப்பினும், ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்டுடன் ஒப்பிடும்போது புதிய OnePlus Nord CE 5G  இல் நிறைய மாற்றங்கள் உள்ளன. அதன் முழு விவரத்தையும் இங்கே காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OnePlus Nord CE 5G போன் மேட் பினிஷ் கொண்ட புளூ வாய்ட், கிளாஸி பினிஷ் கொண்ட சார்கோல் இன்க் மற்றும் கிரேடியன்ட் எபெக்ட் கொண்ட சில்வர் ரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 22,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 ஆகும்.


ALSO READ | Smartphones List: TOP ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ


புதிய OnePlus Nord CE 5G மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, இது 20: 9 ரேஷியோவுடன் 90 ஹெர்ட்ஸ் அப்டேட் விகிதத்தில் இயங்குகிறது. Android 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் நார்டு CE 5ஜி மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் உறுதியளித்து இருக்கிறது. புதிய OnePlus Nord CE இல் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. 


இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.


ALSO READ | Vivo பயனர்களுக்கு Good News! இந்த ஸ்மார்ட்போனுக்கு Android 11 அப்டேட் கிடைக்கும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR