Paytm Payments Bank அதன் செயல்பாடுகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கேட்டுக் கொண்டுள்ளது. பிப்ரவரி 29 முதல், Paytm -ன் கூட்டாளியான Paytm Payments வங்கி, அதன் கணக்கில் மற்றும் வாலட்டில் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ஜனவரி மாதம் மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த காலக்கெடு இப்போது மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 15க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், காஷ்பேக்குகள், ஃபாஸ்டேக்குகள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் போன்றவற்றில் டெபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள Paytm FASTags கணக்கில் ஏற்கனவே உள்ள இருப்பைப் பயன்படுத்தி டோல்கேட் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம். ஆனால் மார்ச் 15க்குப் பிறகு எந்த டாப்-அப்களும் அனுமதிக்கப்படாது.


மேலும் படிக்க | OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?


Paytm FASTag-ஐ செயலிழக்க செய்வது எப்படி?


1. 1800-120-4210 -க்கு டயல் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் வாகனப் பதிவு எண் (VRN) அல்லது டேக் ஐடியை வழங்கவும்.


2. Paytm வாடிக்கையாளர் ஆதரவு முகவர் உங்கள் FASTag கணக்கு மூடப்பட்டதை உறுதி செய்வார்.



இன்னொரு வழியும் உண்டு. 


1. Paytm செயலியை ஓபன் செய்து புரொபைல் ஐகானைத் கிளிக் செய்யவும்.


2. "Help & Support" என்பதைத் தேர்ந்தெடுத்து, "Banking Services & Payments" கிளிக் செய்து, அதில் "FASTag"என்பதற்குச் செல்லவும்.


3. "Chat with us" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்யும்படி நிர்வாகியிடம் கோரிக்கை வைக்கவும்.


ஆன்லைனில் புதிய FASTagஐ வாங்குவது எப்படி?


1. Google Play Store அல்லது Apple App Store -லிருந்து "My FASTag" செயலியை பதிவிறக்கி, e-commerce லிங்கை கிளிக் செய்து "Buy FASTag" ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.


2. அந்த ஆப்சனில் சென்று புதிதாக FASTag -ஐ வாங்கவும். அது உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும். கீழே ஆண்ட்ராய்டு மற்றும் iOS யூசர்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து பாஸ்டேக் வாங்கவும். 


Androidக்கு - https://play.google.com/store/apps/details?id=com.fastaguser&hl=en_IN


iOSக்கு - https://apps.apple.com/in/app/my-fastag/id1492581255


ஆன்லைனில் உங்கள் FASTag -ஐ எவ்வாறு செயல்படுத்துவது?


1. "My FASTag" செயலியை திறந்து "Activate FASTag." என்பதைக் கிளிக் செய்யவும்.


2. அப்போது காண்பிக்கப்படும் லிங்கில் Amazon அல்லது Flipkart என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.


3. பின்னர் FASTag ஐடியை உள்ளிடவும் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.


4. உங்கள் வாகன விவரங்களை உள்ளிடவும், உங்கள் புதிய FASTag ஆக்டிவேட் செய்யப்படும்.


நினைவில் கொள்ளுங்கள், ஒரு வாகனத்திற்கு பல FASTagகள் இருப்பது அனுமதிக்கப்படாது. வாகனத்துடன் கடைசியாக லிங்க் செய்யப்பட்ட FASTag அக்கவுண்ட் மட்டுமே செயலில் இருக்கும்.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ