புதுடெல்லி: Poco தொலைபேசியில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. Poco M3 Pro வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி, அட்டகாச அம்சங்களுடன் Poco M3 Pro அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Poco நிறுவனமும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொலைபேசி பயனர்களுக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்தியா போர்ட்ஃபோலியோவில் முதல் 5 ஜி தொலைபேசி இது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைபேசியின் விவரக்குறிப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்:


Android 11 இல் இந்த தொலைபேசி இயங்கும் 


MIUI 12 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 11 இல் Poco M3 Pro 5G ஸ்மார்ட்போன் இயங்கும். இது 6.5 அங்குல முழு எச்டி + ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. இதன் ரிஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ஆகும். தொலைபேசியின் சேமிப்பு 128 ஜிபி ஆகும்.


தொலைபேசியின் கேமரா அம்சங்கள் 


தொலைபேசியில் டிரிபிள் ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை சென்சார் 48 மெகாபிக்சல்கள் கொண்டது. இரண்டாவது 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ சென்சார் ஆகும். மூன்றாவது 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகும். தொலைபேசியில் 8 மெகாபிக்சல் செல்பி சென்சார் உள்ளது. கேமரா அம்சங்களில் நைட் மோட், ஏஐ கேமரா 5.0, மூவி ஃபிரேம், டைம்-லேப்ஸ், ஸ்லோ மோஷன் வீடியோ மற்றும் மேக்ரோ மோட் ஆகியவை உள்ளன. இதன் மூலம், AI Beautify, Timed Burst, AI Portrait மற்றும் Movie Frame ஆகிய அம்சங்கள் கிடைக்கின்றன.


ALSO READ: POCO M3 Pro அறிமுகம், அசத்தலான பட்ஜெட் 5G போன்


ஃபேஸ் அன்லாக் அம்சமும் கிடைக்கிறது


Poco M3 Pro 5G -யில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் உள்ளன. இணைப்பு அம்சங்களில் இரட்டை சிம் ஸ்லாட், 5 ஜி, என்எப்சி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன.


சார்ஜிங்


இந்த தொலைபேசியில் 5,000 mAh பேட்டரி வழங்கப்படும். அதனுடன் 18 W வேகமான சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.


நிறம் மற்றும் விலை


இந்த தொலைபேசியின் விலை ரூ .15,900 ஆக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில், Poco M3 Pro 5G-யின் இந்த விலை 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்புக்கான விலையாகும். இந்த ஸ்மார்ட்போனை (Smartphone) கூல் ப்ளூ, பவர் பிளாக் மற்றும் போகோ மஞ்சள் ஆகிய நிறங்களில் வாங்கலாம்.


ALSO READ: விரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR