விரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு!

POCO M3 PRO ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 16, 2021, 10:23 AM IST
விரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு!

POCO M3 PRO ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. POCO M3 PRO ஸ்மார்ட்போன் மறுபெயரிடப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி பதிப்பாக ஆக இருக்கலாம். 

POCO M3 PRO இந்தியாவில் விரைவில் அறிமுகமாக காரணம் போக்கோ ஸ்மார்ட்போன் தற்போது பிஐஎஸ் சான்றிதழை பெற்றுள்ளது. அதனால் போக்கோ எம்3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் இது இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக (5G Smartphone) இருக்கலாம் என கூறப்படுகிறது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் விற்பனை தொடங்கியது. போக்கோ எக்ஸ்3 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டது. போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது பிஐஎஸ் சான்றிதழில் M2103K19PI என்ற மாதிரி எண்ணுடனும் எஃப்சிசி சான்றிதழில் M2103K19PG என்ற மாதிரி எண்ணுடன் காணப்பட்டுள்ளது.

ALSO READ | Samsung புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும், அம்சங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7 nm ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் உடன் அட்ரினோ 640 ஜிபியு ஆதரவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News