இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் கார்கள்: சமீப ஆண்டுகளில், உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான விருப்பங்க்ளும் தேவையும் அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களை வாங்குப்வர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் காரை வாங்க திட்டமிடுபவர்களில் நீங்களும் ஒருவரா? உங்கள் பட்ஜெட் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சொகுசு மின்சார கார்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த கார்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றவும், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவும் உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த எலெக்ட்ரிக் கார்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாகவும், பிரீமியமாகவும் இருக்கும். சொகுசு மின்சார வாகனங்களின் சிறந்த அம்சங்கள்.


மேலும் படிக்க | தனுஷிடம் இருக்கும் 5 ஆடம்பர சொகுசு கார்கள்


BMW iX


BMW IX முழு மின்சார பிரிமியம் கார். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை சுமார் ₹ 1.16 கோடி (ரூ 1,15,90,000). இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 372-425 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த கார் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.


ஸ்போர்ட் பேக்கேஜ் மற்றும் ஸ்போர்ட் பேக்கேஜ் உடன் பிஎம்டபிள்யூ இன்டிவிச்சுவல் எலிமெண்ட்ஸ். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். இதில் 76.6 KW பேட்டரி உள்ளது.



ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி


மற்றொரு ஆடி எலக்ட்ரிக் காரான ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி இந்தியாவில் கிடைக்கிறது. இதன் விலை 1,89,00,000 ரூபாய். இந்த கார் ஆடி இ-ட்ரான் ஜிடியின் மேம்படுத்தப்பட்ட வகையாகும். இந்த கார் முழு சார்ஜில் 481 கிமீ வரை பயணிக்கும். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும்.
  
ஆடி இ-ட்ரான் ஜிடி
ஆடியின் முழு மின்சார கார் ஆடி இ-ட்ரான் ஜிடி காரும் இந்த பட்ஜெட்டின் கார் ஆகும். இதன் விலை ரூ.1,65,89,000. முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த கார் 481 கிமீ வரை பயணிக்கும். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும்.



Porsche Taycan


Porsche இன் எலக்ட்ரிக் காரான Porsche Taycan ஒரு பிரீமியம் கார் ஆகும், இதன் பட்ஜெட் ரூ.1 கோடிக்கு அதிகமாக இருக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,53,02,000. முழு சார்ஜில் 340-451 கிமீ வரை பயணிக்கும். காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கி.மீ ஆகும்.



ஜாகுவார் ஐ-பேஸ்


டாடா குழுமத்தின் ஜாகுவார் ஐ-பேஸ் கார் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. உலகின் புகழ்பெற்ற சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உள்ள கார் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.1,19,58,000.


இந்த கார் 90 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 4.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த காரில் பாதுகாப்பு மற்றும் பல அம்சங்கள் உள்ளன.ஜாகுவார் ஐ-பேஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் முழு மின்சார எஸ்யூவி ஆகும்.


மேலும் படிக்க | ஆடியின் நான்காவது தலைமுறை கார்


மேலும் படிக்க | நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ