நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தால், அனைத்துக்கும் ஆன்லைனை மட்டுமே எல்லோரும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வெவ்வேறு வேலைகளுக்கு  ஜிமெயில் உள்ளிட்டவற்றில் தனி கணக்குகளை உருவாக்க வேண்டும். அப்படி தொடங்கும்போது சில பிரச்சனைகளையும் நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அதாவது பல்வேறு கணக்குகள் இருக்கும்போது பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்திருப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல நேரங்களில் நாம் பாஸ்வேர்டுகளை மறந்துவிடுவோம். இதற்காக கணக்குகள் உருவாக்கும்போது, மீட்பு ஜிமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்திருந்தீர்கள் என்றால், பாஸ்வேர்டு மறந்துபோன ஜிமெயில் ஐடிகளை எளிமையாக மீட்டெடுக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மெயில் ஐடி உருவாக்கும்போது ரெக்கவரி ஐடி, போன் நம்பர்கள் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் உருவாக்கிய ஜிமெயில் ஐடியை மீட்டெடுப்பது என்பது கடினம்.


மேலும் படிக்க | 1G முதல் 5G வரை; உலகையே மாற்றப் போகும் 5G கடந்து வந்த பாதை


இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலிலும் நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கண்டுபிடிக்க, மீட்டெடுக்க ஒரு டிரிக்ஸ் ஒன்று உள்ளது. முதலில் ஜிமெயில் லாகின் பக்கத்திற்கு செல்லவும். இங்கே Forget Password என்பதில் கிளிக் செய்யவும். அப்போது, முன்பு பதிவு செய்திருந்த பாஸ்வேர்டை பதிவிடுமாறு கேட்கப்படுவீர்கள். முந்தைய பாஸ்வேர்டு உங்களுக்கு நினைவிருந்தால், அதை உள்ளிடவும். அது நினைவில் இல்லை என்றால், Try Another Way -வைதேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, I do not have my phone number என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில், சில கேள்விகளுக்கு பதிலளிக்க நேரிடும். அந்த தகவலை சரியாக கொடுத்தீர்கள் என்றால், அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்வீர்கள். அனைத்து கேள்விகளுக்குத் சரியாக நீங்கள் பதில் கொடுக்கும்போது ஜிமெயிலை மீட்டெடுக்க முடியும். இந்த கேள்விகளுக்கான பதிலை, நீங்கள் ஏற்கனவே மெயில் ஐடியை ஓபன் செய்யும்போது கொடுத்திருப்பீர்கள்.   


மேலும் படிக்க | போன் வாங்க பிளானா; ரூ.30,000 விலை 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR