போன் வாங்க பிளானா; ரூ.30,000 விலை 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்

சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த டாப் போன்களின் பட்டியல் இதோ.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2022, 02:40 PM IST
  • உலகின் மிகவும் மெலிதான 5ஜி ஸ்மார்ட்போன்
  • ரூ.30,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள்
போன் வாங்க பிளானா;  ரூ.30,000 விலை 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள் title=

உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு தரமான மற்றும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற தேடலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். தற்போது இந்த நவீன காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் மிக சிறந்த கேமரா அமைப்புகளுடன் 30000 ரூபாய் விலை மதிப்பின் கீழ் கிடைக்கும் 5 ஸ்மார்ட் போன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 
உலகின் மிகவும் மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி உள்ள போன் மோட்டோரோலா எட்ஜ் 30. இந்த ஸ்மார்ட்போனில் எச்டிஆர்10+, 144ஹெர்ட்ஸ் எஃப்எச்டி+ ஓஎல்இடி உடனான டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778ஜி+ எஸ்ஓசி, 33வாட் சார்ஜிங் ஆதரவு, 4020எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி மெயின் சென்சார் + 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஒரிஜினல் ரூ.27,999 ஆகும்.

மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை; பாதி விலையில் புதிய டிவியை வாங்கலாம் 

ஒப்போ ரெனோ 7 5ஜி
ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி, எச்டிஆர்10+ ஆதரவுடன் 90ஹெர்ட்ஸ் எஃப்எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே, 65வாட் பாஸ்ட்-சார்ஜிங் ஆதரவுடன் 4,500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஒரிஜினல் ரூ.28,999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 900 எஸ்ஓசி, 25வாட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரி 108 எம்பி குவாட்-கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஒரிஜினல் ரூ.26,499 ஆகும்.

விவோ வி23 5ஜி
விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ கேமரா, 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் டைமன்சிட்டி 920 சிப்செட், எச்டிஆர்10+ ஆதரவுடன் 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 44வாட் சார்ஜிங் கொண்ட 4,200எம்ஏஎச் பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது. இதன் ஒரிஜினல் ரூ.29,990 ஆகும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2
ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி, 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 65வாட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஒரிஜினல் ரூ.27,999 ஆகும்.

மேலும் படிக்க | Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News