பாதி விலையில் iPhone 12 Pro Max..! அலைமோதும் வாடிக்கையாளர்கள் - விலை இதோ..!
புதுப்பிக்கப்பட்ட ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த மொபைல்களை புதிய மொபைல்களுடன் ஒப்பிடும் போது பாதி விலையில் கிடைக்கிறது. பட்ஜெட் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு ஆகும்.
ஸ்மார்ட்போன் யுகத்தில் ஐபோன் மீது ஆசைகொள்ளாதவர்கள் வெகுசிலரே. அதுவும் அந்த மொபைல் பற்றிய அறியாதவர்களாக இருப்பார்கள். ஐபோன் மீது ஆசைஇருந்தாலும், பலருக்கும் அதனுடைய விலை காரணமாக வாழ்க்கை கனவாக இருக்கிறது அந்த மொபைல். அதனால், இதுபோன்ற விலை உயர்ந்த மொபைல்களை பயன்படுத்தப்பட்ட மார்க்கெட்டில் விற்பனையாவதை குறைவான விலையில் வாங்கி உபயோகப்படுத்தலாம். அந்த மார்க்கெட்டில் புதிய மொபைல்களுடன் ஒப்பிடும்போது பாதி விலையில் ஐபோன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | டெபிட் கார்டு இல்லாமல் UPI மாற்றுவது எப்படி? ஈஸியான வழி இதோ..!
இப்போதைய சூழலில் Apple iPhone 12 Pro Max-ன் MRP (128GB) ரூ.129,900. ஆனால் இந்த போன் Mobex-ல் ரூ.65,999க்கு கிடைக்கிறது. அதாவது 49% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, மொபெக்ஸ் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் போனை வழங்குகிறது. அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலம், 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐயில் போனை வாங்கலாம். அதாவது நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியதில்லை.
புதுப்பிக்கப்பட்ட தொலைபேசிகள் என்றால் என்ன?
புதுப்பிக்கப்பட்ட ஃபோன்கள் அடிப்படையில் முன்பு விற்பனையாளரால் விற்கப்பட்ட தொலைபேசிகள். ஆனால் சில குறைபாடுகள் அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டு, சரிசெய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு மீண்டும் வரும். புதுப்பிக்கப்பட்ட போன்கள் புதிய ஃபோன்களை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. நம்பகமான விற்பனையாளரிடமிருந்து மட்டுமே உங்கள் புதுப்பிக்கப்பட்ட தொலைபேசியை வாங்கவும்.
மேலும் படிக்க | WhatsApp: வருகிறது புதிய அம்சம், இனி பல போன்களில் இதை பயன்படுத்தலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ