டெபிட் கார்டு இல்லாமல் UPI மாற்றுவது எப்படி? ஈஸியான வழி இதோ..!

உங்கள் UPI பின்னை மாற்ற விரும்பினால் டெபிட் கார்டு இல்லாமல் மாற்றம் செய்ய முடியும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. இந்தப் வழிகளை பின்பற்றி உங்கள் UPI பின்னை எளிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2023, 10:11 AM IST
  • யுபிஐ பின் ஈஸியாக மாற்றுவது எப்படி?
  • டெபிட் கார்டு இல்லாமல் மாற்றலாம்
  • யுபிஐ பின் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
டெபிட் கார்டு இல்லாமல் UPI மாற்றுவது எப்படி? ஈஸியான வழி இதோ..! title=

தற்போது UPI பேமெண்ட் முறை இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதன் பயன்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது. வங்கிக்கு செல்லாமலேயே விரைவில் அனைத்து பரிவர்த்தனைகளையும் யுபிஐ வழியாகவே செய்து கொள்கின்றனர். இல்லையென்றால் நெட்பேங்கிங்கை உபயோகிக்கின்றனர். அந்தளவுக்கு வங்கிப் பண பரிவர்த்தனை என்பது ஆன்லைன் மயமாகிவிட்டது. யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதன் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு யுபிஐ பின் உருவாக்க வேண்டும். 

யுபிஐ பின் அனைவரும் தங்களுக்கு எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் 4 இலக்க எண்களை உள்ளிட்டு வைத்திருப்பார்கள். அவை மொபைல் எண், பிறந்த தேதி, வாகன எண் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். ஆனால், அந்த பின் எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதற்கான பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட அனைத்து யுபிஐ பணப் பரிவர்த்தனை நிறுவனங்களும் வெளியிட்டிருகின்றன. அதனை சரியாக படித்து அதனை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போய்விடும். 

மேலும் படிக்க | WhatsApp: வருகிறது புதிய அம்சம், இனி பல போன்களில் இதை பயன்படுத்தலாம்

ஒருவேளை உங்கள் யுபிஐ பின் மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டது என்றால் மாற்றிவிடுங்கள். அது ஒரு நல்ல முடிவாக இருக்கும். அப்படி மாற்ற முற்படும் சமயத்தில் உங்களிடம் டெபிட் கார்டு இல்லையென்றாலும் உங்கள் யுபிஐ பின்னை பத்திரமாக மாற்றிக் கொள்ளலாம். 

யுபிஐ பின் டெபிட் கார்டு இல்லாமல் மாற்றுவது எப்படி?

* உங்கள் வங்கியின் மொபைல் ஆப் அல்லது இன்டர்நெட் பேங்கிங் போர்டல் மூலம் உள்நுழையவும்.
* உங்கள் கணக்கு அமைப்புகளுக்குச் (my account Settings) சென்று UPI பின் விருப்பத்தைக் கண்டறியவும்.
* வாடிக்கையாளர்கள் தங்களது புதிய பின்னை உள்ளிட்டு சரிபார்ப்பிற்காக பின்னை மீண்டும் உள்ளிட வேண்டும்.
* சரிபார்த்த பிறகு, UPI பின் வெற்றிகரமாக மாற்றப்படும்.

உங்களிடம் உங்கள் கணக்கு எண் அல்லது ஏடிஎம் கார்டு எண் இல்லையென்றால், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு உங்கள் கணக்கைப் பற்றி அவர்களிடம் கூறலாம். உங்களின் UPI பின்னை மாற்றக்கூடிய உங்கள் கணக்கு எண் மற்றும் தொடர்புடைய தகவலை அவர்கள் உங்களுக்குத் தருவார்கள். UPI பின்னை மாற்றும் போது, ​​உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியின் தேடுபொறியை புதுப்பிக்க வேண்டும். உங்கள் UPI பின்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேறு சில குறிப்புகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாப்பாக வைத்திருக்க பொருத்தமான வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்தலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், இதனால் உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | வெறும் ரூ.19-ல் அதிவேக இணைய வசதி, இன்னும் பல நன்மைகள்: அசத்தும் Vi!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News