ஜியோவின் புதிய திட்டங்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. குறைவான விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை ஜியோ கொடுப்பதால், வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரீப்பெய்ட் சிம்கார்டை பயன்படுத்த விரும்புகின்றனர். 10 நாட்கள் முதல் ஒரு வருடத்துக்கான திட்டம் வரை பல்வேறு திட்டங்களையும் கொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மாதம் இரண்டு மாத ப்ரீப்பெய்டு திட்டங்களை ஒப்பிடும்போது ஒரு வருட ப்ரீப்பெய்டு பிளான்கள் கணிசமான அளவில் குறைவான விலையைக் கொண்டிருக்கும். அந்த வகையில் 2,879 ரூபாய்க்கு இருக்கும் ப்ரீபெய்டு திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 730 ஜிபி டேட்டா மட்டுமில்லாமல், அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் பிரத்யேகமாக கிடைக்கும். 


மேலும் படிக்க | BSNL-ன் அசத்தலான இரண்டு புதிய திட்டங்கள்! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!


ரூ.2879 ரூபாய் திட்டம்


ரிலையன்ஸ் ஜியோவின் 2,879 ரூபாய் பிளான் ஒரு வருடம் செல்லுபடியாகும். 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதன்படி, மொத்தம் 730 ஜிபி அதிவேக டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட தரவு முடிந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைந்துவிடும். 


அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். எந்த நெட்வொர்க்கில் இருந்தும் வாடிக்கையாளர்கள் உள்ளூர் மற்றும் எஸ்டிடி, ரோமிங் அழைப்புகளைச் செய்யலாம். ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம். இது தவிர, JioTV, JioCinema, Jio Security மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவையும் பெறலாம். 


மற்ற திட்டங்கள் 


ஜியோவின் ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டமும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆண்டு முழுவதும் மொத்தம் 912.5 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற  வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.


365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றொரு திட்டமும் ஜியோவிடம் உள்ளது. மற்ற இரண்டு திட்டங்களைக் காட்டிலும் இந்த ப்ரீப்பெய்டு பிளான் மிகவும் காஸ்டிலி. 4,199 ரூபாய்க்கு நீங்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் மொத்தம் 1095 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோவின் இந்த திட்டத்தில் Disney + Hotstar மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud சந்தாவும் இந்த பேக்கில் கிடைக்கும்.


மேலும் படிக்க | ஏர்டெல் அட்டகாசம்: இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ. 6000 கேஷ்பாக்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR