நீங்கள் மார்க்கெட்டில் சிறந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் உங்கள் பட்ஜெட்டில் பர்கிருர்களா இதோ உங்களுக்கான வாய்ப்பு Rs. 7,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் கொண்டுவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ (Infinix Smart 5A) ஸ்மார்ட்போன் சாதகமானது 6.52' இன்ச் HD+ IPS LCD டிஸ்பிளேவுடன், மீடியாடெக் ஹீலியோ ஏ 20 சிப்செட் உடன், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி மூலம் செயல்படுகிறது. இந்த புதிய சாதனத்தின் விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்புக்காக ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் பின்புறத்தில் ஒரு சதுர தொகுதி இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 


ALSO READ | Infinix Smart 5A: வெறும் ரூ.6499-க்கு அட்டகாச போன் அறிமுகம், முழு விவரம் இதோ!!


இது பிளாக், ஓசன் வேவ்ஸ் மற்றும் குவெட்சல் சியான் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்தச் சாதனம் பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக ஆர்டர் செய்யலாம். கேமராவை பொறுத்தவரை, ​​இது டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் LED ப்ளாஷ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் கொண்டிருக்கும். இதில் 8.7 மிமீ தடிமன் மற்றும் 183 கிராம் எடை கொண்டது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை போனின் அடி பகுதியில் உள்ளது. சிம் ஸ்லாட் பிரிவு இடதுபுறத்தில் உள்ளது.


இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A தொலைபேசியின் விலை ரூ .7,999 ஆகும். ஆனால் வெளியீட்டு சலுகையுடன் வாடிக்கையாளர்கள் ரூ .6,499 க்கு கிடைக்கும்.


ALSO READ | Infinix Note 10, Note 10 pro இந்தியாவில் அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR