Infinix Smart 5A: வெறும் ரூ.6499-க்கு அட்டகாச போன் அறிமுகம், முழு விவரம் இதோ!!

அற்புதமான அம்சங்கள் உள்ள போதிலும் உங்களுக்கு ஏற்ற விலையில் கிடைக்கும் ஒரு அட்டகாச போனை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2021, 05:51 PM IST
Infinix Smart 5A: வெறும் ரூ.6499-க்கு அட்டகாச போன் அறிமுகம், முழு விவரம் இதோ!! title=

Infinix Smart 5A: இந்த நாட்களில் மொபைல் போன் என்பது மனிதர்களின் ஆறாவது விரலாகி விட்டது. அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது.

தொலைபேசிகளின் (Mobile Phone) அம்சங்கள் அதிகரிக்கும் போது, ​​அவற்றின் விலைகளும் வானத்தைத் தொடத் தொடங்குகின்றன. ஆனால் மொபைல் போன் பிரியர்களுக்கு கலலை வேண்டாம். அற்புதமான அம்சங்கள் உள்ள போதிலும் உங்களுக்கு ஏற்ற விலையில் கிடைக்கும் ஒரு அட்டகாச போனை பற்றி இந்த பதிவில் காணலாம். இன்பினிக்ஸ் நிறுவனத்தின்  Infinix Smart 5A போனை வாடிக்கையாளர்கள் இன்று முதல் சந்தையில் வாங்கலாம்.

Infinix Smart 5A-வின் விலை

இன்று அதாவது ஆகஸ்ட் 9 அன்று வெளியிடப்பட்டுள்ள Infinix Smart 5A போனின் விலை ரூ .7,999 ஆகும். ஆனால் இன்று அறிமுக சலுகையாக, இன்று மதியம் 12 மணி முதல் இந்த போன் உங்களுக்கு பிளிப்கார்ட்டில் ரூ .6,499 க்கு கிடைக்கிறது.

ALSO READ: Infinix Note 10, Note 10 pro இந்தியாவில் அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ

இந்த போனின் கேமரா அற்புதமாக உள்ளது

8MP முன் கேமராவுடன் 8MP இரட்டை கேமரா அமைப்பும் இந்த போனில் உள்ளது. டெப்த் சென்சாருடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A- இல், வாடிக்கையாளர்களுக்கு டிரிபிள் எல்இடி ஃப்ளாஷ், ஆட்டோ-சீன் டிடெக்ஷன், கஸ்டம் பொக்கே, பிக்சர் மோட் மற்றும் ஏஐ 3 டி பியூட்டி மோட் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

தொலைபேசியின் மற்ற அம்சங்களும் சிறப்பானவை

5,000 எம்ஏஎச் பேட்டரி ஆயுள், கைரேகை சென்சார், ஜி-சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், 4 ஜி சேவைகள், ஐ-கேர் மோட் மற்றும் 6.52-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் இந்த போனின் சில முக்கிய அம்சங்கள் ஆகும்.

Infinix Smart 5A-வில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான இண்டர்னல் ஸ்டோரேஜ் (Phone Storage) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 256 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

ALSO READ: மலிவான விலையில் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News