சியோல்: பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் வரும் மார்ச் மாதம் தனது முதல் மடங்கு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் ஆனது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், Galaxy S10 ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 5G வசதி கொண்ட Galaxy S10-ன் மறுபதிப்பினை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.


சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோங் டாங்-ஜின், மொபைல் உற்பத்தி பிரிவிற்கு தலைமையேற்கையில்... 2019-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடங்கு ஸ்மார்ட்போனினை சாம்சங் வெளியிடும் என தெரிவித்து இருந்தார். மேலும், முதல் பதிப்பாக இந்த மடங்கு ஸ்மார்ட்போனின் ஏற்றுமதி குறைந்தபட்சம் 1 மில்லியன் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் இந்த மடங்கு ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதன்முறையாக சாம்சங் மடங்கு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது, எனினும் இதில் 5G வசதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனை விகிதம் நிறுவனத்திற்கு பலத்த ஏமாற்றத்தை அளிக்கும் எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த மடங்கு ஸ்மார்ட்போன் விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், தொழில் வாழ்க்கையாளர்கள் இந்த போனின் விலை சுமார் 2 மில்லியன் வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உச்சக்கட்ட விலை இந்த போனின் விற்பனையினை கடுமையாக பாதிக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


சாம்சங் நிறுவனத்தின் அறிக்கை படி இந்த போன் ஆனது மடங்கப்பட்ட நிலையில் 4.6"-ஆகவும். திறக்கப்பட்ட நிலையில் 7.4"-ஆகவும் இருக்கும் என தெரிகிறது!