சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் ஹர்மான் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து இன்று JBL PartyBox 200 மற்றும் JBL PartyBox 300 ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"பிரம்மாண்டதிலும் பிரம்மாண்டமாக இந்திய இசை பிரியர்களுக்கு ஒலியினை வழங்கிட இந்த இரண்டு ஸ்பீக்கர்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. USB இணைப்புடன் இசைக்க வல்ல இந்த ஸ்பீகர்கள் USB இணைப்பின் வாயிலாக பயனர்கள் பாடல்களை மாற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.


JBL PartyBox 200 ஆனது இந்தியாவில் ரூ.32,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதே வேலையில், JBL PartyBox 300 ஆனது ரூ.35,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஸ்பீகர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் இன்னுபிற 350 சாதனங்களும் இந்த வலைபக்கத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ப இந்த வலைதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.


இந்த JBL PartyBox ஸ்பீக்கர்களானது 10,000mAh திறனுடன் வெளிவருவதால் சுமார் 18 மணிநேரம் தடையில்லா இசையினை பயனர்கள் பெறலாம். அதே வேலையில் Meter, Pulse மற்றும் Party ஆகிய மூன்று நிலைகளுக்கு ஏற்ப ஒளிகளை ஒளிக்கும் திறன் பெற்றுள்ளது எனவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிட்டார், கீபோர்ட் போன்ற இசை கருவிகளை USP இணைப்பு மூலம் இணைக்கும் வசதியினையும் இந்த JBL PartyBox பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.