ஃபோல்ட் டைப் எனப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் சாம்சங் (SAMSUNG) நிறுவனம் இப்போதைய ராஜாவாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் இந்த உச்சாணிக்கொம்பு அந்த நிறுவனத்துக்கு மூன்றாவது தலைமுறை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் வரை கிடைக்கவில்லை. ஆனால், 3வது தலைமுறை ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்துக்குப்பிறகு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சி டாப்கியரைப் பிடித்தது. விற்பனையில் அமர்க்களப்படுத்தியதால், மீண்டும் ஃபோல்ட் டைப் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் களமிறக்கிக்கொண்டே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Vodafone-Idea: திடீரென நிறுத்தப்பட்ட 3 ரீசார்ஜ் திட்டங்கள்


குறைந்த விலை, மேம்படுத்தப்பட்ட செட்டிங்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. குறிப்பாக, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Z Fold 3 மற்றும் Z Flip 3 கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் 2021 ஆம் ஆண்டில் விற்பனையில் களைகட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டு சாம்சங்க் நிறுவனம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த ஃபோல்ட் டைப் ஸ்மார்ட்போன்களின் மொத்த எண்ணிக்கையை, 2021 ஆம் ஆண்டில் Z Fold 3 மற்றும் Z Flip 3 ஸ்மார்ட்போன்கள் மட்டும் ஒரே மாதத்தில் ரீச் செய்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 


இது தங்களுக்கும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள சாம்சங்க் நிறுவனம், வரும் ஆண்டுகளில் இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தப்பட்ட தரத்துடன் வெளியிடுவதற்கு ஊக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளது. இதே டைப்பில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்றும் சாம்சங்க் நிறுவனம் கூறியுள்ளது. 


Also Read | Time capsule: 130 ஆண்டுகள் பழமையான கால இயந்திரம் கண்டுபிடிப்பு


கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போன், 7.6 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் வேகத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், மடிக்கும்போது, 6.2-இன்ச் HD+ டைனமிக் AMOLEDடிஸ்பிளேவுடன் இருக்கும். இவைதவிர, 4,400mAh பேட்டரியுடன், 12GB / 256GB மற்றும் 12GB / 512GB ஆகிய தேர்வுகளில் கிடைக்கும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை 1,33,000 ரூபாய் ஆகும். மறொரு ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் ஃப்ளிப் 3, .74,000 ரூபாயில் கிடைக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், அதிகம் விற்பனையானதை சாம்சங்க் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR