Online Banking: நாடு முழுவதும் ஆன்லைன் பேங்கிங் சேவை அதிகரித்துள்ளது. பணம் அனுப்புவது முதல் பல்வேறு சேவைகளுக்கும் ஆன்லைன் பேங்கிங் மிகவும் எளிமையாக இருப்பதால் வாடிக்கையாளர்கள், இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் பைரசிகள் மூலம் வாடிக்கையாளர்கள் தகவல் திருடப்பட்டு, மோசடிகள் அரங்கேற்ற ஹேக்கர்கள் காத்திருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ எச்சரிக்கை 


இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லேட்டஸ்டாக எஸ்பிஐ வெளியிட்டிருக்கும் தகவலின்படி, எஸ்பிஐ உள்ளிட்ட 18 பிரபலமான வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பைரசி ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ட்ரினிக் ஆண்ட்ராய்டு ட்ரோஜன் லேட்டஸ்ட் வெர்சன், மறைமுகமாக வாடிக்கையாளர்களின் மொபைலில் நுழைந்து வங்கி தகவல்களை திருடுவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் ஊடுருவல் குறித்து நீங்கள் கவனமாக இருக்காவிட்டால், ஹேக்கர்களின் இலக்கிற்கு நீங்கள் ஆளாக நேரிடும். உங்கள் செல்போனை மட்டுமல்லாமல், வங்கி கணக்கு பரிவர்த்தனையும் அவர்கள் கைவசம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. 


மேலும் படிக்க | Post Office Schemes: எந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்


புதிய ட்ரோஜன் என்ன செய்கிறது?    


இந்த ட்ரோஜன் உங்களின் தனிப்பட்ட புகை படங்கள் மற்றும் வங்கி தகவல்கள் உட்பட ஸ்மார்ட்போனில் இருக்கும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறது. இந்தத் திருடப்பட்ட தகவல்கள் நேரடியாக ஹேக்கர்களைச் சென்றடைகின்றன.  அதன் பிறகு ஹேக்கர்கள் உங்கள் வங்கிக் கணக்கு உட்பட உங்கள் சமூக ஊடகக் கணக்குகளையும் ஹேக் செய்து உங்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வைரஸ்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் திரையையும் பதிவு செய்யுமாம். நீங்கள் அவற்றைத் தவிர்க்க விரும்பினால், அத்தியாவசியமற்ற பயன்பாடுகளைப் பதிவிறக்க வேண்டாம். அதே போல் ஸ்மார்ட்போனை மற்ற சாதனத்திலும் இணைக்கும்போது கவனமாக இருங்கள்.


மேலும் படிக்க | பயணிகளின் கவனத்திற்கு; ரயிலில் இனி இலவசமாக இதை பெறுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ