ரகசியமாக அறிமுகமானது OPPO இன் அசத்தலான 5G போன்
ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போனின் சிறப்பம்சம் அதன் பேட்டரி மற்றும் நல்ல கேமரா ஆகும்.
ஒப்போ நிறுவனம் ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போனின் சிறப்பம்சம் அதன் பேட்டரி மற்றும் நல்ல கேமரா ஆகும். இந்த போன் உடனடியாக முழுமையாக சார்ஜ் செய்யப்படும். ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி இன் பிரமாண்டமான அம்சங்களை தெரிந்து கொள்வோம்...
ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி விவரக்குறிப்புகள்
ரெனோ7 இசட் 5ஜி ஆனது 6.43-இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது முழு எச்டி+ தெளிவுத்திறன், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம், 409 பிபிஐ பிக்சல் டீப் மற்றும் 600நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 90.8 சதவிகித திரை-க்கு-உடல் விகிதம் கொண்ட பஞ்ச்-ஹோல் திரையுடன் வழங்குகிறது. இதில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்
ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி கேமரா
ரெனோ7 இசட் 5ஜி இன் பின்புற கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதனுடன் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. இந்த சாதனம் கலர்ஓஎஸ் 12 பிலேவர்ஸ் உடன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.
ஒப்போ ரெனோ7 இசட் 5ஜி பேட்டரி
ஸ்னாப்டிராகன் 695 சிப் ரெனோ7இசட் 5ஜியை இயக்குகிறது. இது 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ரெனோ7 இசட் 5ஜி ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Tecno Spark 8C அறிமுகம்: ரூ.8,000-ஐ விட குறைந்த விலை, அசத்தும் அம்சங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR