ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உள்ளது!! ஏர்டெல் தனது திட்டங்களின் விலையை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் அனைத்து திட்டங்களிலும் மொபைல் போன் அழைப்பு (போன் கால்) மற்றும் தரவு (டேட்டா) கட்டணங்களை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கான தொகையை அதிகரித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முடிவு பற்றி செய்தி வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து நிறுவனம் சார்பில் அதிககாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கூறிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மித்தல் கூறியவற்றை இங்கே பார்க்கலாம். 


விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது: சுனில் மித்தல் 


இந்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மித்தல் வெளியிட்டுள்ளார். தொழிலில் குறைந்த வருமானம் கிடைப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது என்று அவர் கூறியுள்ளார். மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் பேசிய சுனில் மித்தல் , 'இது போர்ட் முழுவதும் இருக்கும்' என்றார்.



மலிவான திட்டம் விலை உயர்ந்தது


நிறுவனம் அதன் குறைந்த விலை திட்டத்தை கடந்த மாதம் 57 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 8 வட்டங்களில் ரூ.155 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். முந்தைய ரூ.99 திட்டத்தில், 200எம்பி டேட்டா மற்றும் அழைப்புகள் வினாடிக்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்கப்பட்டன.


மேலும் படிக்க | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! BSNL இந்த 4 ரீசார்ஜ் பேக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது!



மொபைலை ஆக்டிவ்வாக வைத்திருக்க மட்டுமே ரீசார்ஜ் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த திட்டம் டென்ஷனை கொடுக்கலாம். நிறுவனத்தின் ARPU இலக்கு ரூ.200, அதை ரூ.300 ஆக உயர்த்துவதுதான் நிறுவனத்தின் இலக்கு. ஆரோக்கியமான இருப்புநிலை இருந்தாலும், தொலைத்தொடர்பு துறையில் வருமானம் மிகக் குறைவு என்று சுனில் மித்தல் கூறினார். ஆகையால் நிறுவனத்தை லாபகரமானதாக மாற்ற கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சுனில் மித்தல் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | IPL 2023 Free Live Streaming: ஏர்டெல் பயனர்களுக்கு அடிச்சது ஜாக்பட், ஒரே பிளானில் பல நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ