Maruti Suzuki: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கவுள்ளது. நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது, செப்டம்பர் முதல் மாருதியின் அனைத்து மாடல்களின் விலைகளும் அதிகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதி கார் விலையை உயர்த்தியது


மாருதி (Maruti) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, கடந்த ஒரு வருடத்தில் நிறுவனம் மீதான செலவுச் சுமை கணிசமாக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆகையால், இந்த சுமையின் ஒரு பகுதி விலை அதிகரிப்பு வடிவத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி விடப்படும்.


நிறுவனத்தின் கூற்றுப்படி, மாருதியின் அனைத்து மாடல்களின் விலைகளும் செப்டம்பர் 2021 முதல் அதிகரிக்கும்.


விலை எவ்வளவு அதிகரிக்கும்?


கார்களின் விலை எவ்வளவு உயரும் என்று நிறுவனம் தெரிவிக்கவில்லை. கடந்த மாதத்தில் அதாவது ஜூலை மாதத்தில், சிஎன்ஜி கார்களின் விலையை உயர்த்துவதாக நிறுவனம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன.


ஜூலை மாதத்தில், மாருதி சுசுகி உள்ளீட்டு விலை அதிகரிப்பால் சிஎன்ஜி கார்களின் விலையை உயர்த்தியதாக கூறியிருந்தது. இந்த மாடல்களின் விலை ரூ .15,000 வரை உயர்த்தப்பட்டது (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை).


ALSO READ: Top 7 Mid Size SUV: உங்கள் பட்ஜெட்டுக்குள் கச்சிதமாய் பொருந்தும் அட்டகாசமான கார்கள்!! 


முன்பும் விலை அதிகரிக்கப்பட்டது


முன்னதாக, மாருதி சுஸுகி பல்வேறு உள்ளீட்டு விலை அதிகரிப்பு காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் அதன் பல கார்களின் விலையை உயர்த்தியது. ஜனவரியில், மாருதி சில கார் மாடல்களுக்கான விலையை அதிகரித்தது. மாடல் மற்றும் வரம்பைப் பொறுத்து விலைகள் ரூ .34,000 வரை உயர்த்தப்பட்டன.


டாடாவும் கார்களின் விலையை அதிகரித்தது


டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தனது Nexon EV SUV-யின் விலையை இந்த மாதம் மீண்டும் உயர்த்தியது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக டாடா மோட்டார்ஸ் தனது மின்சார எஸ்யூவியின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த முறை டாடா நெக்ஸான் எலக்ட்ரிக்கின் ஆடம்பர வகை கார்களான Tata Nexon EV XZ+ மற்றும் Nexon EV XZ+ LUX ஆகியவற்றின் விலை ரூ .9,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


மஹிந்திரா நிறுவனமும் விலையை உயர்த்தியது


ஜூலை மாதத்தில், மஹிந்திரா (Mahindra) அதன் அனைத்து மாடல்களின் விலைகளையும் அதிகரித்தது. இந்த ஆண்டு நிறுவனத்தின் மூன்றாவது உயர்வு இதுவாகும். முன்னதாக, மஹிந்திரா 2021 ஜனவரி மற்றும் மே மாதங்களில் வாகனங்களின் விலையை உயர்த்தியது.


ALSO READ: வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR