அதிர்ச்சி தகவல்! Maruti Suzuki கார்களின் விலைகள் அதிகரிக்கின்றன
Maruti Suzuki நிறுவனம், கார் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக 2022 ஜனவரி முதல் கார்களின் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி ஜனவரி 2022 முதல் பல்வேறு மாடல்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மாருதி சுஸுகி தேசிய பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த கடிதத்தில், "கடந்த ஆண்டில், பல்வேறு வகையிலான கச்சா பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலைகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாத நிலையில், 2022 ஜனவரியில் பல்வேறு மாடல்களின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவனத்தின் கடந்த மாத வாகன உற்பத்தியில் 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 2020 நவம்பரில் 1,50,221 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நவம்பரில் 1,45,560 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. "எலக்ட்ரானிக் உதிரிபாகங்களின் பற்றாக்குறை வாகனங்களின் உற்பத்தியில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியது," என்று நிறுவனம் குறிப்பிட்டது.
ALSO READ: Kia alias Carens: இந்தியாவில் அறிமுகமாகும் Kia MPV காரின் பெயர் 'கேரன்ஸ்'
2020 நவம்பரில் 1,46,577 யூனிட்களாக இருந்த மொத்த பயணிகள் வாகன உற்பத்தி கடந்த மாதம் 1,42,025 யூனிட்டுகளாக இருந்ததாக MSI தெரிவித்துள்ளது. Alto மற்றும் S-Presso மாடல்களை உள்ளடக்கிய மினி கார்களின் உற்பத்தி கடந்த மாதம் 19,810 யூனிட்களாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 24,336 யூனிட்களாக இருந்தது.
இதேபோல், WagonR, Celerio, Ignis, Swift, Baleno, மற்றும் Dzire உள்ளிட்ட காம்பேக்ட் கார்களின் உற்பத்தி முந்தைய ஆண்டில் 85,118 யூனிட்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 74,283 யூனிட்டுகளாக குறைந்துள்ளது என்று MSI தெரிவித்துள்ளது. எனினும் Gypsy, Ertiga, S-Cross, Vitara Brezza மற்றும் XL6ஆகிய பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி, கடந்த மாதம் 35,590 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த கார்களின் உற்பத்தி 24,719 யூனிட்களாக இருந்தது.
2020 நவம்பரில் 11,212 யூனிட்களாக இருந்த Eeco வேனின் உற்பத்தி கடந்த மாதம் 9,889 யூனிட்களாக குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. MSI தனது இலகுரக வர்த்தக வாகனமான Super Carry மாடலின் உற்பத்தி கடந்த மாதம் 3,535 யூனிட்டுகளாக இருந்ததாகவும், கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 3,644 யூனிட்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ALSO READ:Best Selling Car: இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் கார் இதுதான், உங்ககிட்ட இருக்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR