லித்தியம் பேட்டரிக்கு போட்டியாக சோடியம் பேட்டரி - பாதி விலையில் மின் வாகனங்கள்..!
பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக லித்தியம் பேட்டரி பார்க்கப்பட்ட சூழலில், அதற்கும் மாற்றாக சோடியம் பேட்டரி விரைவில் மார்கெட்டுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் இப்போது லித்தியம் பேட்டரியில் அதிக விலையில் விற்பனையாகும் வாகனங்களின் விலை பாதியாக குறைந்துவிடும்.
எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது, இருப்பினும் இந்த கார்கள் அதிக விலை காரணமாக அனைவரின் பட்ஜெட்டிலும் வரமுடியவில்லை. மேலும், அவற்றின் வரம்பும் குறைவாக உள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் அதை ஒரு நகர பயன்பாட்டுக் காராக எடுத்துக்கொள்கிறார்கள். எலெக்ட்ரிக் கார்களை முதன்மை வாகனமாக எடுத்துக்கொள்பவர்கள் இப்போது சிலர் மட்டுமே இருக்கின்றனர். தற்போது எலக்ட்ரிக் கார்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பேட்டரிகள் விலை உயர்ந்தவை மற்றும் மிகவும் கனமானவை. ஆனால் தற்போது இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது லித்தியம் பேட்டரிக்கு பதிலாக சோடியம் பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை லித்தியம் பேட்டரிக்கு மாற்றாக உபயோகப்படுத்துவதில் நல்ல ரிசல்டை கொடுத்துள்ளது. அதாவது, சீன பேட்டரி தயாரிப்பு நிறுவனம் சோடியம் அயன் பேட்டரியை தயாரித்துள்ளது. இந்த பேட்டரி மிகவும் மலிவானது. இந்த பேட்டரி மூலம் சீனாவின் எலெக்ட்ரிக் கார் நிறுவனமான ஜாக் உலகின் முதல் இ-காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை குறைவாக இருக்கும்
இந்த பேட்டரி சீனாவின் ஹினா பேட்டரி டெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டது. இந்த பேட்டரி மின்சார வாகனத்தின் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பேட்டரிகள் லித்தியம் மற்றும் கோபால்ட்டில் தயாரிக்கப்படுகின்றன. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஜாக்கின் கார் JAC EV 25 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. வரம்பு வரை செல்லலாம். வரும் காலங்களில், இந்த பேட்டரிகளை மேலும் மேம்படுத்தி வரம்பை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சார்ஜிங் வேகமும் அதிகம்
சோடியம் அயன் பேட்டரியின் அடர்த்தி மிகவும் குறைவு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் லித்தியம் அயன் பேட்டரியின் அடர்த்தி மிக அதிகம். அத்தகைய சூழ்நிலையில், குறைந்த மற்றும் அதிக வெப்பநிலையில் கூட அவை சிறப்பாக செயல்படுகின்றன மற்றும் அவற்றின் சார்ஜிங் வேகம் லித்தியம் பேட்டரியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். அதாவது, இந்த பேட்டரிகள் பொருத்தப்பட்ட கார்களை குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
மேலும் படிக்க | ChatGPT-க்கு மூளையாக இருந்தவர் யார் தெரியுமா? எலோன் மஸ்குக்கு என்ன தொடர்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ