Whats App Update: ’சீக்கிரம் கொண்டு வாங்க’ புதிய அப்டேட்டை அறிவித்த வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் சாட்களை போன் மற்றும் லேப்டாப்களில் டவுன்லோடு செய்துகொள்ளும் புதிய அப்டேட்டை விரைவில் கொண்டு வர இருக்கிறதாம் வாட்ஸ்அப் நிறுவனம்.
யூசர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அப்டேட்டுகளை கொண்டு வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். ஆனால், நீண்ட நாட்களாக யூசர்கள் எதிர்பார்த்த அப்டேட்டுக்கு, பதில் எதுவும் தெரிவிக்காமல் இருந்த அந்த நிறுவனம் இப்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் யூசர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | Hacking: புதிய வழியில் வாட்ஸ்அப் ஹேக்கிங் - உஷார் மக்களே!
இதுநாள் வரை வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் எடுக்க யூசர்கள் மிகவும் சிரப்பப்பட்டனர். கூகுள் டிரைவ்களில் மட்டுமே சேமிக்க வழிவகை செய்யப்பட்டிருந்த நிலையில், புதியதாக போன் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர்களில் சேமித்துக் கொள்ளும் வகையிலான அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அனைத்து வாட்ஸ்அப் சாட்களையும் அவரவர் மொபைல்கள் மற்றும் லேப்டாப்புகளிலேயே சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த தகவல் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் அப்டேட்டுகளை முன்கூட்டியே ரிலீஸ் செய்யும் WABetaInfo தளம் தான் இந்த தகவலையும் லீக் செய்துள்ளது. வாட்ஸப் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் புதிய அப்டேட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் வாப்பீட்டா இன்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப் சாட்களை கூகுள் டிரைவில் சேமித்துக் கொள்ளலாம். தேவையென்றால் அவற்றை மீண்டும் வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். டெக் குறித்து அடிப்படை தகவல் தெரிந்தவர்களுக்குகூட இந்த விஷயம் மிகவும் கஷ்டமாக இருந்தது. இதனை எளிமையாக்க வேண்டும் என உலகம் முழுவதும் இருந்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் சென்றன. இந்நிலையில், இந்த அப்டேட்டைக் கொண்டு வர இருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
மேலும் படிக்க | iPhone 13 Pro Max: மெகா தள்ளுபடியில் ரூ.2500-க்கு ஆப்பிள் ஐபோன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR