பேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் இந்தியாவின் 200 மில்லியன் பயனாளர்களுக்கென புதிய அப்டேட் ஒன்றினை தரவிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட்டை விரைவில் கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்தப் புதிய அப்டேட் வாட்ஸ் அப்பில் ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனைக்கான புதிய வசதியை ஏற்படுத்தி இணைக்கவுள்ளது. யுபிஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த  அப்டேட். இதன்மூலம் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பயனாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.