Bajaj CT125X: நீங்கள் புதிய பைக் ஒன்று வாங்க திட்டமிட்டிருந்தால், சில நாட்கள் காத்திருக்கலாம். பஜாஜ் நிறுவனம் புதிய பைக் ஒன்றை கொண்டு வரவுள்ளது. அதுவும் குறைவான விலையில், அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்காக இருக்கும் என பஜாஜ் தெரிவித்துள்ளது. அந்த பைக் மாடல் 125 சிசி பஜாஜ் CT125X. டீலருக்கு பைக் வர ஆரம்பித்துவிட்டது. விரைவில் விற்பனைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிடி 100 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய வடிவமைப்பு 


சிடி 100 பைக்கின் அடுத்த வெர்சனாக பார்க்கப்படும் பஜாஜ் CT125X பைக்கில் சிங்கிள் சீட்டர் இடம்பெற்றுள்ளது. USB சார்ஜர் வசதியும் பைக்கில் கொடுப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆட்டோ டிராவல் டெக் என்ற யூடியூப் சேனல் இது தொடர்பான வீடியோ ஒன்றையும்  வெளியிட்டுள்ளது. அதில் பைக்கின் வடிவமைப்பு மற்றும் எஞ்சின் அமைப்பு தற்போதைய CT110X போலவே உள்ளது.


மேலும் படிக்க | கீலெஸ் என்ட்ரி: உங்க காரில் இந்த தொழில்நுட்பம் இருக்கா? இதோ புதிய அம்சம்


கருப்பு மற்றும் சிவப்பு நிற ஷேடோ தவிர, புதிய டூயல்-டோன் பளபளப்பான கருப்பு மற்றும் பச்சை நிற ஷேடோவும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய CT110X உடன் ஒப்பிடும்போது வரவிருக்கும் CT125X ஆனது பாடி பேனலில் புதிய கிராபிக்ஸ்களைப் பெறுகிறது. இருப்பினும், மிகப்பெரிய மாற்றமாக, புதிய அம்சமாக பார்க்கப்படுவது என்னவென்றால், இருக்கை வடிவமைப்பு மற்றும் ஹேண்டில்பார் கிளாம்ப்களில் பொருத்தப்பட்ட USB சார்ஜர் ஆகும்.


சாதாரண டயர்கள் CT125X-ல் கொடுக்கப்படலாம். டிஸ்கவர் 125 மாடலில் இருக்கும் இன்ஜினைப் போன்று தெரிகிறது. ஒட்டுமொத்த உருவாக்க தரம் நன்றாக உள்ளது. பைக்கின் விலை சுமார் 80 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Honda Cars offers: ஹோண்டா கார்களுக்கு பம்பர் தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ