இந்திய ஆட்டோ சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வாகனத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து மின்சார வாகன தயாரிப்பில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலக்டிரிக் கார்களை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. விரைவில் டாடா டியாகோவின் எலக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவும் உள்ளது. டாடா மோட்டார்ஸ் ஏற்கனவேமின்சார வாகன போர்ட்ஃபோலியோவில் நெக்ஸான் மற்றும் டைகோர் ஆகிய இரண்டு கார்களைக் கொண்டுள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் நல்ல விற்பனையாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலை விவரம்


டாடா டியாகோ எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் மதிப்பிடப்பட்ட விலை ரூ.12.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம். மலிவான ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காராக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், அது சுமார் 250 கிமீ தூரம் வரை செல்லும். டாடா அல்ட்ராஸின் எலக்ட்ரிக் வாகன (EV) மாடலையும், டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. Nexon EV-யின் வெற்றிக்குப் பிறகு, டாடா அதன் மற்ற கார்களையும் EV செக்மென்ட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.


மேலும் படிக்க | ரூ.200 விலைக்குள் தினமும் 2ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் பெஸ்ட் பிளான்


டாடா மோட்டார்ஸ் பிளான்


அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 எலக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், இது நம் அனைவருக்கும் முக்கியமான தருணம். Tiago EV உடன், எங்கள் EV பிரிவின் விரிவாக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். அடுத்த சில வாரங்களில், நிறுவனம் Tiago EV விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை தெரிவித்துவிடும். தற்போது 40,000-க்கும் மேற்பட்ட நெக்ஸான் EV மற்றும் Tigor EV கார்கள் நாட்டின் சாலைகளில் ஓடுகின்றன என்றார்.


சுற்றுப்புறச் சூழல்


இந்தியாவை எலக்ட்ரிக் வாகன மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக கூறியிருக்கும் டாடா மோட்டார்ஸ், Tata Passenger Electric Mobility (TPEM) TPG Rise Climate உடன் இணைந்து பசுமையான பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மொபிலிட்டி தீர்வையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சாலைகளில் இயங்கும் கார்களில் 30 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Realme C33: ரூ.549-க்கு ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கலாம்; ஆனால் ஒரு கண்டிஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ