Realme C33: ரூ.549-க்கு ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கலாம்; ஆனால் ஒரு கண்டிஷன்

Realme C33 ஸ்மார்ட்போன் அற்புதமான சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வழியில் வெறும் 549 ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2022, 01:28 PM IST
  • ரியல் மீ ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி
  • வெறும் ரூ.549-க்கு ஆஃபரில் வாங்கலாம்
  • அறிமுகச்சலுகையாக அதிபட்ச எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அறிவிப்பு
Realme C33: ரூ.549-க்கு ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கலாம்; ஆனால் ஒரு கண்டிஷன் title=

Realme Latest Smartphone: சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme சமீபத்தில் இந்தியாவில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த விலையில் பல சிறந்த அம்சங்களை வழங்குகிறது. சில காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் அதாவது செப்டம்பர் 12, 2022 முதல் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் இ-காமர்ஸ் இணையதளமான Flipkart-லிருந்து வாங்கலாம். கூடுதல் சலுகைகளின் உதவியுடன், அதன் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.8,999-லிருந்து வெறும் ரூ.549 நீங்கள் வாங்கலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

Realme C33 மீது பெரும் தள்ளுபடி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Realme C33 ஸ்மார்ட்போனின் வேரியண்ட் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த ஃபோன் வாங்குவதற்கான பணம் செலுத்தினால், ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு அதன் விலை உங்களுக்கு ரூ.7,999 ஆக குறையும். இந்த சலுகை Realme C33-ன் 4GB RAM மற்றும் 64GB ROM வகைகளுக்கும் செல்லுபடியாகும். மேலும் இந்த மொபைல் வேரியண்டின் அசல் விலை ரூ.9,999.

மேலும் படிக்க | ஏர்டெல் 5ஜி அறிமுகம்: சேவையைப் பயன்படுத்த புதிய 5ஜி சிம் தேவையா?

ரூ.549-க்கு Realme C33 வாங்குவது எப்படி?

Realme C33-ன் இரண்டு மாடல்களுக்கும் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பழைய போனுக்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனின் 32ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு கொண்ட ரூ.8,999 வேரியண்ட்டை வாங்குவதன் மூலம் ரூ.8,450 தள்ளுபடியும், ரூ.9,45-க்கு ரூ.9,999 எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் 64ஜிபி ரேம் மாடலையும் வாங்கலாம். இந்தச் சலுகையின் முழுப் பலனும் உங்களுக்கு கிடைத்தால், வெறும் ரூ. 549-க்கு Realme C33-ஐ வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

Realme C33-ன் அம்சங்கள்

Realme C33 மொபைல் Unisoc T612 சிப்செட்டில் வேலை செய்கிறது. உங்களுக்கு இதில் இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா அமைப்பில் 50MP பிரதான சென்சார் மற்றும் 0.3MP இரண்டாவது சென்சார் உள்ளது. இந்த போன் 5MP முன் கேமராவுடன் வருகிறது. Realme C33 இரண்டு சேமிப்பு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6.5 இன்ச் HD + LCD டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி, டூயல் சிம் வசதி மற்றும் ஆடியோ ஜாக் ஆகியவையும் கிடைக்கும். 

மேலும் படிக்க | Amazon சேலில் டெக்னோ போன்களுக்கு பம்பர் தள்ளுபடி: முந்துங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News