இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும். அந்த அளவிற்கு அன்றாட பணிகள் பலவற்றுக்கு நாம் இணையத்தை சார்ந்து இருக்கிறோம். இணையத்தின் உதவியுடன் தான், பண பரிவர்த்தனை மேற்கொள்ளுதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்தல் போன்ற பல பணிகளை மேற்கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நேரங்களில் இண்டர்நெட் வேகம் குறைவதால், நமக்கு பெரும் சிக்கல்களும் இடையூறுகளும் ஏற்படலாம். போனில் உள்ள இணையம் மெதுவாக வேலை செய்தால், கோப்புகளை அல்லது வீடியோக்களை பதிவேற்றுதல், பதிவிறக்குதல், செயலிகள் செயல்பட முடியாத நிலை ஆகியவை ஏற்படும். உங்கள் தொலைபேசியின் (Smartphone) இணைய வேகத்தை அதிகரிக்க கீழே குறிப்பிட்டுள்ள சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் இணைய வேகத்தை அதிகரித்து, இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ளலாம்.


இணைய வேகம் குறைவதற்கான சில காரணங்கள்


ஆக்டிவ் ஆக உள்ள செயலிகள் - போனில் பின்னணி ஆக்டிவ் ஆக இயங்கும் செயலிகள் அதிக தரவுகளை பயன்படுத்தும் காரணத்தினால், இணைய வேகம் குறைவாக இருக்கலாம்.


ஃபோன் மெமரி நிரம்பிய நிலை - தொலைபேசி நினைவகம் நிரம்பியிருந்தால், இணைய வேகம் பாதிக்கப்படலாம்.


Wi-Fi நெட்வொர்க் பிரச்சனை - நீங்கள் பயன்படுத்தும் Wi-Fi நெட்வொர்க்கில் சிக்கல் இருந்தால் இணைய வேகம் பாதிக்கப்படலாம்


உலாவி கேச் மற்றும் குக்கீகள் - அதிக கேச் மற்றும் குக்கீஸ் இருந்தாலும் உலாவியின் வேகத்தைக் குறைக்கும்.


பலவீனமான நெட்வொர்க் சிக்னல்: நீங்கள் இருக்கும் இடத்தில் நெட்வொர்க் சிக்னல் பலவீனமாக இருந்தால், இணையம் வேகம் குறைவாக இருக்கலாம்.


மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... குறைந்த கட்டணத்தில் தினம் 2GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள்


இணைய வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை


1. சில நேரங்களில், ரீஸ்டார்ட் செய்தாலே, மெதுவான இணைய வேகம் உட்பட பல சிக்கல்களை சரிசெய்யலாம்.


2. உங்கள் மொபைலையும் செயலிகளையும் அவ்வப்போது அப்டேட் செய்யவும். ஏனெனில் இதன் அம்சங்கள் இணைய வசதியை மேம்படுத்துவதாக இருக்கும்.


3. உங்கள் மொபைலில் டேட்டா சேவர் பயன்முறையை இயக்கவும். இது பின்னணியில் டேட்டா விரயமாவதை குறைக்கும்.


4. நெட்வொர்க் சிக்னல் நன்றாக இருக்கும் இடத்திற்கு உங்கள் தொலைபேசியை எடுத்துச் செல்லவும். நெட்வொர்க் அமைப்புகளுக்குச் சென்று, நெட்வொர்க் பயன்முறையை ஆட்டோ நிலையில் அமைக்கவும்.


5. நீங்கள் Wi-Fi ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், திசைவியை ரீஸ்டார்ட் செய்யவும்.


6. பின்னணியில் இயங்கும் பயன்படுத்தாத எல்லா செயலிகளையும் மூடுவதால், இணைய வேகம் அதிகரிக்கும். 


7. தொலைபேசி நினைவகத்தை சீர் செய்ய தேவையற்ற செயலிகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கவும். சில தரவை மைக்ரோ எஸ்டி கார்டுக்கு மாற்றவும்.


8. உங்கள் உலாவியின் அமைப்புகளுக்குச் சென்று டெம்ப்ரெரி பைல்கள் மற்றும் குக்கீகளை நீக்கவும்.


9. வைஃபை பயனபடுத்தும் வசதி இருந்தால், மொபைல் டேட்டாவுக்குப் பதிலாக வைஃபையைப் பயன்படுத்தவும். வைஃபை நெட்வொர்க் அமைப்புகளைச் சரிபார்த்து, அது சரியாகச் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.


10. VPN ஐப் பயன்படுத்தினால், இணைய வேகம் குறையலாம் என்பதால் அதை அணைக்கவும்.


மேலும் படிக்க | அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ