டெக்னோ இந்திய சந்தையில் ஸ்பார்க் 8சி (Spark 8C) பட்ஜெட் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Tecno Spark 8C ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் வருகிறது. இது பின்புறத்தில் புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 8 சி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த போன் அம்சங்களின் அடிப்படையில் பிரமாண்டமானதாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொலைபேசி 6.6 இன்ச் டிஸ்ப்ளே, 13எம்பி கேமரா மற்றும் 5000mAh வலுவான பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8சி-யின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8சி-யின் விலை


டெக்னோ ஸ்பார்க் 8சி-யின் விலை 3ஜிபி ரேம் + 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டிற்கு மட்டும் ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ச்மார்ட்போன், டர்க்கைஸ் சியான், டயமண்ட் கிரே, ஐரிஸ் பர்பில் மற்றும் மேக்னட் பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விற்பனை அமேசான் இந்தியாவின் இணையதளத்தில் பிப்ரவரி 24 முதல் தொடங்கும்.


மேலும் படிக்க | ஃபிளிப்கார்ட் சலுகை! 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் அதிரடி தள்ளுபடி


டெக்னோ ஸ்பார்க் 8சி: விவரக்குறிப்புகள்


டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் ரெசல்யூஷன் HD+ (720 x 1612 பிக்சல்கள்) ஆகும். ஸ்கிரீனில் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz தொடு மாதிரி வீதம் (டச் சேம்பிளிங் ரேட்) உள்ளது.


டெக்னோ ஸ்பார்க் 8சி: கேமரா


முன்பக்கத்தில், இந்த போனில் 8எம்பி சிங்கிள் செல்ஃபி ஸ்னேப்பர் உள்ளது. பின்புறத்தில், ஃபோனில் 13எம்பி முதன்மை லென்ஸ் மற்றும் AI சென்சார் உள்ளது. பின்புற கேமரா ஐலேண்ட் சற்று பெரிதாக உள்ளது. இது சாதனத்தின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.


டெக்னோ ஸ்பார்க் 8சி: பிற அம்சங்கள்


இந்த ஸ்மார்ட்போன், 3ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி வர்சுவல் ரேம் ஆதரவுடன் இணைந்து UNISOC T606 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஃபோனில் மொத்தம் 6ஜிபி ரேம் உள்ளது. ஸ்டோரேஜைப் பற்றி பேசுகையில், 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனை அடிப்படையாகக் கொண்ட HiOS 7.6 இல் இயங்குகிறது.


டெக்னோ ஸ்பார்க் 8சி: பேட்டரி


இந்த தொலைபேசி 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இது டிடிஎஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, ஃபோனில் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இது IPX2 ஸ்பிளாஸ்-எதிர்ப்பு மதிப்பீட்டை வழங்குகிறது.


மேலும் படிக்க | ரூ 871 மாதத்தவணையில் Redmi Note 9 Pro Max சூப்பர் ஆஃபர்! 5020mAh பேட்டரி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR