புதுடெல்லி: Instant messaging application WhatsAppப்புடன் மோதுவதற்கு டெலிகிராம் புதிய அம்சத்துடன் களம் இறங்கியுள்ளது. புதிய அம்சத்தால் ஈர்க்கப்பட்ட பயனர்கள் Telegram செயலியை வேகமாக பதிவிறக்கத் தொடங்கிவிட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்பு பல மேம்பட்ட மற்றும் பயனுள்ள அம்சங்கள் இருந்தபோதிலும், Telegram  செயலியில் வீடியோ அழைப்பு இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. இப்போது அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதால், Telegram பலத்துடன் களத்தில் இறங்கிவிட்டது. 


டெலிகிராம் வீடியோ அழைப்பு அம்சத்தை பீட்டா பதிப்பு 0.7 இல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், microsoft's app center platformத்தில் இருந்து    பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான டெலிகிராம் செயலியுடன் இந்த பயன்பாட்டை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.   


வீடியோ அழைப்பு அம்சம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது.  எனவே இன்னும் சில நாட்களில் புதிய அம்சம் வெளியிடப்படும் போது, WhatsApp, Viber போன்ற செயலிகளுக்கு கடுமையான போட்டி ஏற்படும். 


டெலிகிராமின் சிறப்பு அம்சங்கள்


வாட்ஸ்அப்பைப் போலவே, இது ஒரு செய்தியிடல் தளமாகும். 2 லட்சம் பேர் கொண்ட குழுவை இங்கு உருவாக்கலாம் என்பதோடு, பயனர், பொது சேனல்களையும் இங்கு உருவாக்கலாம். வாட்ஸ்அப்பில் பொது சேனல்களைத் தயாரிக்கும் அம்சம் கிடையாது. கோப்பு, புகைப்படம், வீடியோ பகிர்வு ஆகியவற்றிலும் டெலிகிராம் பயனுள்ளதாக இருக்கும். 


டெலிகிராமில் 1.5 ஜிபி வரை கோப்புகளைப் பகிரலாம். இது தவிர, pass code lock உண்டு. நீங்கள் அனுப்பும் செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் வசதி (self-destructing messages) கொண்டது டெலிகிராம். இருப்பினும் இதுபோன்ற அம்சம் இப்போது வாட்ஸ்அப்பிலும் தொடங்கப் போகிறது.  


இங்கே கருத்து பரிமாற்றம் end-to-end encryption கொண்டது என்பதால், உங்கள் உரையாடல் முற்றிலும் பாதுகாப்பானது.  பல தளங்களில் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது Android, iOS, Windows Phone, Windows, MacOS, Linux மற்றும் web ஆகியவற்றை ஆதரிக்கிறது.   


Also Read | WhatsApp லேண்ட்லைன் எண்ணில் இருந்தும் செயல்படும்... எப்படி? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்...