WhatsApp லேண்ட்லைன் எண்ணில் இருந்தும் செயல்படும்... எப்படி? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்...

மொபைல் எண் இல்லாமல் வாட்ஸ்அப்பை இயக்க முடியும் என்பது பலருக்குத் தெரியாது... இதோ வழிமுறைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 08:37 PM IST
WhatsApp லேண்ட்லைன் எண்ணில் இருந்தும் செயல்படும்... எப்படி? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்... title=

புதுடெல்லி: அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் WhatsApp ஒரு முக்கியமான செயலியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமானது.  தனிப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு இயக்கலாம். ஆனால் மொபைல் எண் இல்லாமல் வாட்ஸ்அப்பை இயக்க முடியும் என்பது மிகச் சிலருக்குத் தான் தெரியும். 

இந்த செயலியை இயக்க உங்களுக்கு எந்த தொலைபேசி எண்ணும் தேவையில்லை என்று புரிந்துக் கொள்ள வேண்டாம். உண்மையில், லேண்ட்லைன் எண்ணிலிருந்தும் வாட்ஸ்அப்பை இயக்கலாம்.

லேண்ட்லைன் எண்ணை வாட்ஸ்அப்பில் இணைப்பது எப்படி?
இந்தத் தகவல் பெரும்பாலான வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகளும் வர்த்தகர்களும், தனிப்பட்ட மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் வைக்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பினால், லேண்ட்லைன் மூலமாகவும் WhatsApp செயலியைப் பயன்படுத்தலாம். 

அதேபோல், லேண்ட்லைன் எண்ணை நேரடியாக வாட்ஸ்அப் வணிகச் செயலியுடன் இணைக்க முடியும். இந்த எண்ணைக் கொண்டு நீங்கள் தனிப்பட்ட மொபைல் எண்ணைப் போலவே வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தலாம்.

லேண்ட்லைனில் இருந்து வாட்ஸ்அப்பை இயக்க, முதலில் உங்கள் மொபைல் போனில் வாட்ஸ்அப் பிசினஸை நிறுவவும். இப்போது உங்கள் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றில் WhatsApp செயலியைத் திறக்கவும். அப்போது, நாட்டின் குறியீடு பயனர்களிடமிருந்து கேட்கப்படும், பின்னர் 10 இலக்க மொபைல் எண் கேட்கப்படும். அதற்கு பதிலாக உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட லேண்ட்லைன் எண்ணையும் உள்ளிடலாம்.

Real Also | What a App! WhatsApp.. ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்!

சரிபார்ப்பு நடைமுறையின் போது இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும்

செயலியில் சரிபார்ப்பு என்பது எஸ்.எம்.எஸ் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் இருக்கும். லேண்ட்லைனில் எஸ்.எம்.எஸ் வர முடியாது என்பதால், உங்களின் தொலைபேசியில் சரிபார்ப்பு நடைபெறும் நடைபெறும்.  
இருப்பினும், செயலி சரிபார்ப்புக்கு முதலில் நீங்கள் எஸ்.எம்.எஸ் என்ற தெரிவும் கேட்கப்படும். சரிப்பார்ப்பு நடைமுறை நிறைவடைந்த ஒரு நிமிடம் கழித்து, எஸ்.எம்.எஸ் அல்லது Call Me என்ற தெரிவு வரும். இப்போது Call Me என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
இதற்குப் பிறகு, உங்களுடைய Call Me என்ற தெரிவின் அடிப்படையில் உங்கள் லேண்ட்லைன் எண்ணுக்கு அழைப்பு வரும். இது ஒரு தானியங்கி குரல் அழைப்பாக இருக்கும், அதில் உங்களுக்கு 6 இலக்க சரிபார்ப்புக் குறியீடு கூறப்படும். அழைப்பின் மூலம் குறியீட்டை தெரிந்துக் கொண்ட பிறகு, உங்கள் செயலியில் குறியீட்டு எண்ணைப் பகிர வேண்டும்.  அவ்வளவு தான்...  உங்கள் லேண்ட்லைன் எண்ணில் இருந்தே வாட்ஸ்அப் செயலியை இயக்கலாம்.

Trending News