மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தப்பித்தவறி கூட இந்த தவறை செய்திடாதீங்க!!
Electric Vehicle Safety Messures Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது... ஆனால், எலக்ட்ரிக் கார்களை வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்பது தெரியுமா?
வாகனங்கள் வாங்குபவர்களின் கவனம் தற்போது மின்சார வாகனங்களின் மீது இருக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின்சார கார்கள் மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு அரசாங்கம் ஊக்கம் கொடுத்து மின்சார வாகனங்களைப் பயன்படுத்தச் செய்து வருகிறது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கி ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் உள்ளன. எலக்ட்ரிக் கார் தீப்பிடிக்கும் சம்பவங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்படுகிறோம். நமது வசதிக்காக வாங்கும் பொருளே நமது வாழ்க்கைக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடக்கூடாது.
எலெக்ட்ரிக் வாகனம் ஓட்டுபவர்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிரபல கார் நிறுவனங்களின் மின்சார வாகனங்களே தீப்பிடித்து எரியும் சம்பவங்களைக் கேட்கிறோம். அதிலும் விலை அதிகம் கொடுத்து வாங்கிய டெஸ்லா கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்றும் அண்மையில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது.
எனவே, எந்த மின்சார காராக இருந்தாலும், அதன் உரிமையாளர்கள் செய்யக்கூடாத தவறுகள் எவை என்பதையும், அவற்றை தவிர்ப்பதன் அவசியத்தையும் தெரிந்துக் கொள்வோம்.
EV வாகனத்தில் செய்யும் தவறுகள்
அமெரிக்காவின் மெக்ஸிகோவில் டிஜுவானா நகரில் கார் டிரைவர் ஒருவர் டெஸ்லா காரின் பேட்டரியை மின் கம்பியில் சிக்க வைத்து பேட்டரியை சார்ஜ் செய்ய முயன்றார். அப்போது டெஸ்லா கார் தீப்பிடித்து எரிந்தது.
மின்சார கார்களில் தீ விபத்துகள்
இந்த தீவிபத்து பற்றி பேசிய நகரின் தீயணைப்பு அலுவலக அதிகாரிகள், டெஸ்லா காரின் பாதி எரிந்த பகுதி முழுவதுமாக எரிவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்றும் அதன் பின்னரே அதை அங்கிருந்து அகற்ற முடியும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்...
லித்தியம் அயன் பேட்டரி
காரின் லித்தியம் பேட்டரி தீப்பற்றிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரை சார்ஜ் செய்வதற்காக, வாகன உரிமையாளர், மின் கம்பியுடன் காரை நேரடியாக இணைத்துவிட்டிருந்தார்.
எரிபொருள் செலவு
காருக்கு தேவையான எரிபொருளான மின்சாரத்திற்கு ஆகும் செலவை குறைப்பதற்காக, நேரடியாக கம்பிகளில் கொக்கி போட்டு, மின்சாரத்தை இழுக்கும் வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் இருக்கிறது. வீடுகளின் மீது செல்லும் மின்கம்பிகளில் நேரடியாக கம்பிகளை இணைத்து இலவச மின் இணைப்புகளை பெறுவதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எரிபொருள் சார்ஜர் கட்டமைப்பு
மின்சார வாகனத்திற்கு தேவையான எரிபொருளான மின்சாரத்தை பெறுவதற்கான, சார்ஜிங் உள்கட்டமைப்பு (Electric Vehicle Charging Station) வசதிகள் இருந்தாலும், மக்கள் செய்யும் இதுபோன்ற சிறிய அளவிலான தவறுகள் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது.
மேலும் படிக்க | மின்சார கார்களுக்கு உலக அளவில் குறையும் மவுசு! தெளிவாய் காரணங்களை அடுக்கும் ஆய்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ