ஆகஸ்டில் அறிமுகமாகும் இரு சக்கர வாகனங்கள்! சூப்பர் பைக் முதல் டிவிஸ் ஜூபிடர் 110 வரை...

Two Wheeler Launch In August : இந்தியாவில் பண்டிகை சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திலேயே ஆட்டோமொபைல் துறையும் சூடு பிடித்துவிடுகிறது.  

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை ஆகஸ்ட் முதல் அறிமுகப்படுத்தத் தொடங்குகின்றன. அந்த வகையில் இந்த ஆகஸ்டில் அறிமுகமாகவிருக்கும் இரு சக்கர வாகனங்கள்....

1 /7

ஆகஸ்ட் மாதத்தில் நான்கு சக்கர வாகனப் பிரிவைத் தவிர, பல ஆட்டோ நிறுவனங்கள் இரு சக்கர வாகனப் பிரிவில் பல வாகனங்களை அறிமுகப்படுத்துகின்றன. ராயல் என்ஃபீல்டு முதல் டிவிஎஸ் வரை பல நிறுவனங்கள் ஆகஸ்டில் அறிமுகப்படுத்தும் இரு சக்கர வாகனங்கள் இவை...  

2 /7

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350: ஆகஸ்ட் 12 ஆம் தேதி புதிய Clalis 350 ஐ ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தவுள்ளது. 5 வகைகளில் த்யாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்குளில் பைக்குகளின் வண்ணங்களிலும் சில மாறுதல்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி, நிறுவனம் பைக்கின் முழு வடிவமைப்பை வெளியிடும்.  

3 /7

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 : ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 பல்வேறு வகையிலான சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.  கடந்த ஆண்டு அறிமுகமான ஹிமாலயன் 450 மற்றும் 450 சிசி பைக்கின் சில அம்சங்கள் ஹிமாலயன் 650 இல் இருக்கும்...

4 /7

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்: இந்த பைக்கின் பெயரை சில மாதங்களுக்கு முன் பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம். இருப்பினும், இந்த பைக் குறித்த பல தகவல்கள் வெளியாகவில்லை

5 /7

பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார் : கிளாசிக் லெஜெண்ட்ஸின் பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார் பைக், இந்தியாவில் மீண்டும் வருகிறது. 650 சிசி பிரிவில் வரவிருக்கும் இந்த பைக் ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குடன் நேரடியாக போட்டியிடும்.  5 டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ள்கள் கொண்ட இந்த பைக் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

6 /7

டிவிஎஸ் ஜூபிடர் 110: டிவிஎஸ் நிறுவனம் இரு சக்கர வாகனப் பிரிவில் புதிய ஸ்கூட்டரை கொண்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் ஆகஸ்ட் இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும்  இந்த ஸ்கூட்டரை சில மாறுதல்களுடன் டிவிஎஸ் அறிமுகப்படுத்துகிறது

7 /7

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது