கடந்த சில நாட்களாக ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு வழிகளில் டேட்டாவைத் திருடுவதற்காக செயலி மூலம் மால்வேர் வைரஸை மொபைலுக்கு அனுப்பி உளவு பார்க்கிறார்கள். மேலும், யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். யூசர்களை உளவு பார்ப்பதற்காகவும், தகவலை திருடுவதற்காகவும் சில செயலிகள் இருக்கின்றன. அந்த செயலிகள் இங்கே கொடுகப்பட்டிருக்கின்றன. ஒருவேளை உங்கள் போனில் அந்த செயலிகள் இருந்தால் இன்றே டெலிட் செய்து விடுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Whatsapp Tips And Tricks: ரகசிய சாட்டுகளை மறைக்க வேண்டுமா? மாட்டிக்கொள்ளாமல் இருக்க டிப்ஸ்


ஏனென்றால், இந்த செயலிகளில் இருந்து மால்வேர் வைரஸ் தொலைபேசிக்குள் நுழைகிறது. அந்த மால்வேர் உடனடியாக உங்கள் எல்லா தரவையும் ஹேக்கர்களுக்கு அனுப்பிவைத்துவிடும். மேலும், நாள்தோறும் உங்களை கண்காணிக்கவும், தகவல்களை எளிதாக அணுகுவதற்கும் உதவிக் கொண்டிருக்கும்.


ஹேக்கர்களின் செயலிகள்


1. PIP Pic Camera Photo Editor 
2. Wild &Exotic Animal Wallpaper
3. Zodi Horoscope
4. PIP Camera 2022 
5. Magnifier Flashlight


இந்த 5 செயலிகள் வழியாக ஹேக்கர்கள் அதிகம் ஊடுருவுகிறார்களாம். இந்த செயலிகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் விளையாட்டுகள் கூட ஸ்கீரினில் வருமாம். அதனை நீங்கள் கிளிக் செய்தால், அடுத்த  நொடி உங்கள் மொபைல் ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் தகவல்களை திருடிக் கொண்டிருப்பார்கள். இதுவரை நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனே டெலிட் செய்துவிடுங்கள். 


மேலும் படிக்க | மொபைலில் தேவையில்லாத நோடிபிகேஷன்களை ஆப் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR