ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களிடம் கட்டாயம் இருக்கக்கூடிய செயலி வாட்ஸ் அப். ஸ்மார்டான மெசேஜ் செயலியான இதனையே நண்பர்கள் முதல் ரகசிய தோழிகள் வரை என அனைவரிடமும் சாட் செய்ய பயன்படுத்துகின்றனர். அதாவது பர்சனல் சாட்பாக்ஸாக வாட்ஸ் அப் இருக்கிறது.
அந்த சாட்களை டெலிட் செய்ய விரும்பாத நீங்கள், யாரும் படித்துவிடக்கூடாது என நினைத்தீர்கள் என்றால், அதனை யார் கண்ணிலும் படாமல் மறைத்து வைக்கலாம். இந்த ஸ்மார்டான டிரிக்ஸை நீங்கள் உபயோகித்தால், தேவையில்லாமல் மொபைலை மறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. தைரியாமாக பிறரிடம் மொபைலைக் கொடுக்கலாம்.
மேலும் படிக்க | போனை ரீசார்ஜ் செய்தால் ரூ.2400 கேஷ்பேக் கிடைக்கும்!
ஆன்ட்ராய்டு யூசர்கள்
ஆன்ட்ராய்டு யூசர்களாக இருந்தால், இதுவரை மூன்றாம் தரப்பு செயலியை நீங்கள் பயன்படுத்தி வந்திருந்தால் அதனை நீக்கிவிடுங்கள். வாட்ஸ்அப்பிலேயே பிறர் படிக்க முடியாதபடி வாட்ஸ்அப் சாட்களை எப்படி படிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்களின் தனிப்பட்ட சாட்களை நீங்கள் மறைக்க வேண்டும் என்று விரும்பினால், வாட்ஸ்அப் சாட் பாக்ஸூக்கு செல்லுங்கள். எந்த மெசேஜை மறைக்க விரும்புகிறீர்களோ, அதனை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். அபோபது, Archive என்ற ஆப்சன் ஸ்கிரீனில் தோன்றும். அதனை கிளிக் செய்து ரகசிய சாட்களை மறைத்துவிடுங்கள்.
ஐபோன் யூசர்கள்
ஐபோன் யூசராக நீங்கள் இருந்தால், வாட்ஸ்அப்பின் சாட் பாக்ஸூக்கு செல்லுங்கள். அதில் ஆன்ட்ராய்டு மொபைல் யூசர்கள் செய்வதுபோல செய்யாமல், மறைக்க விரும்பும் சாட்களை மேல்நோக்கி ஸ்வைப் செய்ய வேண்டும். அப்போது, எங்கு சேமிப்பது என்பது தொடர்பான கேள்வி கேட்கப்படும், அதனை நீங்கள் தேர்ந்தெடுத்தவுடன் உங்கள் சாட் அங்கு சென்று பதிவாகிக்கொள்ளும்.
யாரும் பார்க்க முடியாது?
வாட்ஸ்அப் சாட்களை யாரேனும் திறந்துபார்த்தால் உங்களின் தனிப்பட்ட சாட்கள் மேலே இருக்காது. பழைய மெசேஜ்கள் மட்டும் இருக்கும். கீழே சென்றுல பார்த்தால் மட்டுமே தனிப்பட்ட சாட்கள் இருக்கும். அதனை பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR