தொழில்நுடபம் வளர்ந்திருக்கும் அதேநரத்தில் அதனை முறையாக பயன்படுத்தாமல், சில கேவலமாக செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று தான் ஸ்பை கேமரா. ஹோட்டல்கள், பாத்ரூம் உள்ளிட்ட இங்களில் வைக்கப்படும் ஸ்பை கேமராக்களை கொண்டு ஒருவரின் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் ரெக்கார்டு செய்யப்படுகின்றன. பின்னர் அதனை கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளும் சமூக விரோத கும்பல் ஈடுபடுகிறது. இத்தகைய சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளாமல் இருக்க, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனைக் கொண்டே சீக்ரெட் கேமராவை கண்டுபிடித்துவிடலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிடன் டிவைஸ் டிடெக்டர் கேமரா (ஆண்ட்ராய்டு)


ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஸ்பை கேம் அல்லது ஸ்பை மைக்கை கண்டறிய உதவும்  Hidden device detector camera செயலியை மிகவும் எளிமையாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பை டிடெக்டர் ஆப் ஆனது எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் கதிர்வீச்சின் தீவிரத்தை (radiation intensity) கண்டறிய மேக்னட்டிக் சென்சாரை (magnetic sensor) பயன்படுத்தி கேமராவை கண்டுபிடிக்கிறது. 


மேலும் படிக்க | சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!


மேலும் படிக்க | அமைதி பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் காட்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!


ஹிடன் கேமரா டிடெக்டர் 


Hidden camera detector செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் சந்தேகத்திற்குரிய பொருளின் அருகே ஸ்மார்ட்போனின் கேமராவை கொண்டு செல்ல வேண்டும். அங்கே ஏதேனும் ஸ்பை கேமரா இருந்தால், இந்த ஆப் அதை கண்டுபிடிக்கும். இந்த ஆப்பில், ஸ்பீக்கர்கள் மற்றும் கேமராக்களின் மேக்னெட்டிக் செயல்பாட்டை (magnetic activity) கண்டறியும் மேக்னட்டோமீட்டர் (magnetometer) உள்ளது.


ஹிடன் டிடெக்டர் கேமரா


ஆண்ட்ராய்டில் மட்டுமே அணுக கிடைக்கும் Hidden camera detector செயலி ஸ்பை கேமராவையும் கண்டறிய உதவும். இது ஒரு மேக்னெட்டோ மீட்டர் உடன் வருகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் மேக்னெட்டிக் சென்சாரை பயன்படுத்தி ரகசிய கேமராவின் மேக்னெட்டிக் செயல்பாடுகளையும் கண்டறியும்.


ஹிடன் கேமரா டிடெக்டர் ப்ரோ 


Hidden Camera Detector Pro ஆப் மூலம் ஒரு அறையின் சுற்றுப்புறங்களில் உள்ள உளவு கேமராக்கள் அல்லது மறைக்கப்பட்ட கேமராக்களை கண்டுபிடிக்கலாம். இந்த ஆப் ஆனது மறைத்து வைக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோனையும் கண்டறியும். மேலும் இதனால் அகச்சிவப்பு கேமராவையும் கண்டறிய முடியும்.


மேலும் படிக்க | டிவிட்டரை அடுத்து அதிரடியில் இறங்கிய மெட்டா... ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ