இருசக்கர வாகனங்களுக்கான பட்டியலில் விருப்ப தேர்வாக இருப்பது ஸ்கூட்டர். கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் விற்பனையாகியுள்ளன. இதில் ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பலரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்த நிறுவனம் ஒரு லட்சத்து 75,832 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து கம்பீரமாக முதல் இடத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க |  வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பம்பர் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்


2வது இடத்தைப் பிடித்துள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 74,200 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. மூன்றாவது இடத்தை சுசுகி நிறுவனம் பிடித்துள்ளது. 57,966 ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 4வது இடத்தில் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனமும், 5வது இடத்தில் யமஹா மோட்டார் இந்தியா நிறுவனமும் உள்ளன. யமஹா மோட்டார் நிறுவனம் 13, 251 ஸ்க்கூடர்களை விற்பனை செய்து கடைசி இடத்தை பிடித்தது. 



அதிகம் விற்பனையை செய்துள்ள ஹோண்டா நிறுவனத்தில் ஆக்டிவா ஸ்கூட்டரைக் கடந்து டியோ மற்றும் கிராசியா ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்கள் அதிகளவு தேர்ந்தெடுத்துள்ளனர். டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிட்டர் ஸ்கூட்டரை அதிகம் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள், TVS NTorq செயல்திறன் ஸ்கூட்டர் மற்றும் எலக்டிரிக் ஸ்கூட்டர் TVS iQube வாகனத்தையும் விரும்பி வாங்கியுள்ளனர். டிவிஎஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால், அதன் விற்பனை அடுத்தடுத்த மாதங்களிலும் இதேநிலையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



முதல் இடத்தில் இருக்கும் ஹோண்டாவுக்கும், 2ம் இடத்தில் இருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் சுமார் 1 லட்சம் வாகனங்கள். அதனால், அந்த இடைவெளியை குறைக்க டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் கடந்த சில மாதங்களாக விற்பனையில் பெரும் சரிவை சந்தித்து வருவது, அந்த நிறுவனத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலையில் யமாஹா நிறுவனமும் உள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்தடுத்த மாதங்களில் விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டிருப்பதால், சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR