Best Mid Size Sedan: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் அசத்தல் கார்களின் பட்டியல் இதோ
Best Mid Size Sedan: மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இத்தகைய கார்களை விற்பனை செய்கின்றன. இவை குறைந்த விலையில் மிகச்சிறந்த அம்சங்களை கொண்ட கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த பதிவில் இந்த கார்கள் பற்றி காணலாம்.
நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பி, உங்கள் விருப்பம் மிட் சைஸ் செடானாக இருந்தால், நடுத்தர பட்ஜெட்டில் உங்களுக்குப் பிடித்த காரை எளிதாக வாங்கலாம். தற்போது, உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் பல செடான்கள் (மிட் சைஸ் செடான் 2022) சந்தையில் கிடைக்கின்றன. மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இத்தகைய கார்களை விற்பனை செய்கின்றன. இவை குறைந்த விலையில் மிகச்சிறந்த அம்சங்களை கொண்ட கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த பதிவில் இந்த கார்கள் பற்றி காணலாம்.
மாருதி சுசுகி சியாஸ்
மாருதி சுஸுகியின் நடுத்தர அளவிலான செடான் கார் சியாஸின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8,99,500 ஆகும். இதில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளது. இது ஐந்து வகைகளில் கிடைக்கிறது. ஏழு வண்ணங்களில் இதை வாங்கலாம். இந்த காரில் கே15 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா அமேஸ்
ஹோண்டா கார்களின் நடுத்தர அளவிலான செடான் மாடலான ஹோண்டா அமேஸ், உங்கள் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6,56,300 ஆகும். இது 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. தோற்றம், வடிவமைப்பு, இடம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பல கார்களுடன் போட்டியிடும் சக்தியும் இந்த கார் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | டயரை மாத்த போறிங்களா? நாணய சோதனை ஒருமுறை செஞ்சுருங்க!
ஹூண்டாய் வெர்னா
வெர்னா ஹூண்டாயின் சிறந்த நடுத்தர அளவிலான செடான்களில் ஒன்றாகும். 9,40,600 ஆரம்ப விலையில் இந்த காரை வாங்கலாம். இந்த கார் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் 6-ஸ்பீடு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. கார் வடிவமைப்பு, தோற்றம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் இது மிகவும் வலுவானது.
மாருதி சுஸுகி டிசையர்
மாருதி சுசூகியின் நடுத்தர அளவிலான செடான் டிசையர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.24 லட்சம் ஆகும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் எஞ்சின் 1197சிசி திறன் கொண்டது. இது பெட்ரோலில் 22 கிமீ மைலேஜையும், சிஎன்ஜியில் லிட்டருக்கு 31 கிமீ மைலேஜையும் தருகிறது.
டாடா டிகோர்
டாடா மோட்டார்ஸின் மிகவும் பிரபலமான நடுத்தர அளவிலான செடான் டாடா டைகோரும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த காரை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷன்களிலும் வாங்கலாம். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.99 லட்சம். இது 4 பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட கார் ஆகும். இதன் இன்ஜின் 1199சிசி திறன் கொண்டது.
மேலும் படிக்க | வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெறும் Maruti Brezza - Grand Vitara!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ