ரயில் டிக்கெட் கேன்சல் செய்த பிறகு கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
Train ticket cancellation: ரயில் டிக்கெட் கேன்சல் செய்த பிறகு உங்கள் வங்கி கணக்குக்கு பணம் வர வேண்டும் என்றால், நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சில இருக்கின்றன.
ரயில் பயணம் திட்டமிடுபவர்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்பே தாங்கள் செல்லும் ஊருக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துக் கொள்வது வாடிக்கையான ஒன்று. ஏனென்றால், நாள்கள் நெருங்க நெருக்க டிக்கெட் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். குடும்பத்துடன் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் ரயில் டிக்கெட் முன்பதிவு அவசியமாகிறது. அதேநேரத்தில் தவிர்க்க முடியாத சூழலில் பயணிகள் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வார்கள். அப்போது, உங்கள் பணம் வங்கி கணக்குக்கு வருமா? வராதா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். அப்படி வரும் என்றால் எவ்வளவு நாட்களுக்குள் பணம் திரும்ப வங்கி கணக்குக்கு வரும் என்ற கேள்வி பொதுவாக ரயில் டிக்கெட் ரத்து செய்பவர்களுக்கு எழுவது வாடிக்கையாக இருக்கிறது.
இதற்கு ரயில்வே தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் Ask Disha மூலம் தெளிவான விளக்கத்தை ரயில் பயணிகள் பெற முடியும். உங்களுக்கான விளக்கத்தை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் Ask Disha கொடுக்கிறது.
மேலும் படிக்க | அமேசான் பிரைம் பயனர்கள் கவனத்திற்கு! இனி இதற்கும் தனி கட்டணம்!
சரி, இங்கே ரயில் டிக்கெட் கேன்சல் செய்த பிறகு ரீபண்ட் எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
1. IRCTC அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctc.co.in பக்கத்துக்கு செல்லுங்கள். AskDisha லிங்க் ஹோம் பக்கத்தில் இருக்கும். அதனை பார்த்து நீங்கள் கிளிக் செய்யுங்கள்.
2. அடுத்ததாக வரும் பக்கத்தில் அங்கே ‘ரீபண்ட் ஸ்டேட்டஸ்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. இதற்குப் பிறகு, டிக்கெட் கேன்சல், தோல்வியடைந்த பரிவர்த்தனை TDR என்ற விருப்பம் கிடைக்கும். இங்கே நீங்கள் 'டிக்கெட் கேன்சல்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் PNR எண்ணை டைப் செய்யுங்கள். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். இதில் உங்கள் ரீஃபண்ட் செய்யப்பட்டதா? இல்லையா? அல்லது அது எப்போது நடக்கும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
5. பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகும் உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால், உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ