சமூக ஊடக தளமான ட்விட்டர் ஏப்ரல் 20 அன்று அரசாங்கம், பிரபலங்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான கணக்குகளில் இருந்து அதன் லெகசி நீல நிற சரிபார்ப்பு அடையாளங்களை (ப்ளூ செக்மார்க்ஸ்) அகற்றத் தொடங்கியது. இதன் மூலம் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் சந்தா வருவாயை அதிகரிக்க அதன் உரிமையாளர் எலோன் மஸ்க்கின் நீண்டகால திட்டத்தில் ஒன்றை நிறைவேற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம், ட்விட்டர் அதன் லெகசி சரிபார்ப்பு அமைப்பு மூலம் முன்னர் சரிபார்க்கப்பட்ட கணக்குகளிலிருந்து சரிபார்ப்பு அடையாளங்களை அகற்றுவதாக அறிவித்தது.


நீல நிற சரிபார்ப்பு அடையாளங்களை (blue checkmarks) இழந்த முக்கிய கணக்குகளில், இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), மற்றும் PIB உண்மை சோதனை பிரிவு, கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தனிப்பட்ட கணக்குகளும் அடங்கும்.


இந்தக் கட்டுரையை எழுதும் போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜூனியர் ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரின் தனிப்பட்ட கணக்குகள் தற்போது சாம்பல் நிற சரிபார்ப்பைக் கொண்டுள்ளன. சாம்பல் நிற டிக் அந்த ட்விட்டர் கணக்கு அரசாங்கத்தை அல்லது பலதரப்பு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதை எடுத்துக்காட்டும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள அரசு நிறுவனங்கள் அல்லது அதிகாரிகள் தற்போது சாம்பல் நிற சரிபார்ப்பு குறிக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.


அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற திரையுலகப் பிரமுகர்கள்; விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா மற்றும் உதய் கோடக் போன்ற வணிகத் தலைவர்களும் தங்கள் சரிபார்ப்பு அடையாளங்களை இழந்துள்ளனர்.


உலகளவில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பியான்ஸ், கிம் கர்தாஷியன், ஜஸ்டின் பீபர், செலினா கோம்ஸ், கேட்டி பெர்ரி, லேடி காகா மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே போன்ற மில்லியன் கணக்கான ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பொதுப் பிரமுகர்களுக்கும் இப்போது இந்த தனிச்சிறப்புவாய்ந்த டிக் இல்லை. 


மேலும் படிக்க | பறந்து போன குருவி... ஒடி வந்த நாய்... ட்விட்டரில் பெரும் பரபரப்பு!


ட்விட்டரின் பழைய சரிபார்ப்பு முறையை மாற்றியமைக்கிறது நிறுவனம்


ட்விட்டரின் முந்தைய கணக்கு சரிபார்ப்பு முறையின் கீழ், இந்த செக்மார்க்குகள் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடத்தக்க மற்றும் உண்மையான பயனர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், உண்மையான மற்றும் பொது நல அக்கறை கொண்ட கணக்குகள் என தோன்றிய கணக்குகளுக்கு நிறுவனம் இலவசமாக ப்ளூ டிக்கை அளித்தது. 


அக்டோபர் 2022 இல் ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க், கடந்த ஆண்டு பகிரங்கமாக இந்த செக்மார்க்குகள் வழங்கப்பட்ட விதம் "ஊழல் நிறைந்தது, முட்டாள்தனமானது" என்று குறிப்பிட்டு இந்த சரிபார்ப்பு முறையை விமர்சம் செய்தார். 


முந்தைய சரிபார்ப்பு முறையை முடக்கிய அதே வேளையில், அதற்குப் பதிலாக, நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ட்விட்டர் புளூ சேவையின் மூலம், டிசம்பர் 2022 இல் மக்கள் நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தை வாங்குவதற்கான விருப்பத்தை அவர் அறிமுகப்படுத்தினார். சந்தா சேவையில் பதிவு செய்யவில்லை என்றால், ஏற்கனவே ப்ளூ டிக்கை கொண்டிருப்பவர்கள் அதை இழப்பார்கள் என்ற அதிர்ச்சி செய்தியை அவர் அளித்தார். அப்போது ட்விட்டரிடம் லெகசி சரிபார்ப்பு முறையின் கீழ் சுமார் 420,000 சரிபார்க்கப்பட்ட கணக்குகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 


ட்விட்டர் ப்ளூ என்பது ட்விட்டரின் முக்கிய முன்முயற்சிகளில் ஒன்றாகும். இது விளம்பரத்திற்கு அப்பால் அதன் வருவாய் வகைகளை பல்வகைப்படுத்துகிறது. மேலும் இது அதன் எதிர்கால வருவாய் வளர்ச்சிக்கு முக்கியமானது. கடனில் மூழ்கியிருக்கும் ட்விட்டரின் நிலையை எலான் மஸ்க் இதன் மூலம் சீராக்க நினைக்கிறார். 


சமீபத்திய மாதங்களில், முன்பு இலவசமாகக் கிடைத்த பல அம்சங்களையும்  ட்விட்டர் ப்ளூ சந்தாவின் கீழ் ட்விட்டர் கொண்டு வந்துள்ளது. அவை நிறுவனத்தின் அல்காரிதமிக் 'ஃபார் யூ' டைம்லைனில் பரிந்துரைக்கப்படும் தகுதி, SMS அடிப்படையிலான இரு காரணி அங்கீகாரம் மற்றும் வாக்கெடுப்புகளில் வாக்களிக்கும் திறன் போன்றவை அடங்கும்.


மேலும் படிக்க | Twitter Layoffs: எலோன் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! 200 ஊழியர்களை தட்டித்தூக்கிய டிவிட்டர்! வேலை காலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ