பறந்து போன குருவி... ஒடி வந்த நாய்... ட்விட்டரில் பெரும் பரபரப்பு!

Twitter New Logo: டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து  பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2023, 05:11 PM IST
  • ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது.
  • Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக உள்ள நாயின் உருவப்படம்.
  • டிவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கிய பிறகு அடிக்கடி பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.
பறந்து போன குருவி... ஒடி வந்த நாய்... ட்விட்டரில் பெரும் பரபரப்பு! title=

Twitter New Logo Replaces: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து  பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். "நீல நிற குருவிக்கு பதில் நாய்" லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. டுவிட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

2013 இல் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சியான Dogecoin கரன்சியின்  ஆதரவாளர் எலான் மஸ்க். டெஸ்லா Dogecoin ஐ வணிகப் பொருட்களுக்கான கட்டணமாக ஏற்றுக்கொள்கிறது என்று முன்னதாக குறிப்பிட்டார். SpaceX விரைவில் இதனை ஏற்றுக் கொள்ளும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இணையத்தள இடைமுகத்தில் Dogecoin சின்னமான நாயின் படம் திடீரென தோன்றிய பிறகு Dogecoin மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்தது.

லோகோ ஏன் மாற்றப்பட்டது என்று அதிகமான பயனர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதால், எலான் மஸ்க் அதற்கு பதில் கூறும் வகையில் இரண்டு ட்வீட்களை வெளியிட்டார். அவர் தனது இந்த நடவடிக்கைக்கு நகைச்சுவையாக  படங்களை வெளியிட்டுள்ளார். டிவிட்டர் செயலியின் லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே - எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..!

டிவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கிய பிறகு அடிக்கடி பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. எலோன் மஸ்க், கிண்டல் கேலி நையாண்ட்டி செய்வதிலும் வல்லவர். மஸ்க் என்றாலே அதன்பிறகு அதிரடி நடவடிக்கைகள் தான் என்று புகழ் பெற்றவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர். ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க், கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் தானே தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி மீண்டும் சர்ச்சையானார்.

மேலும் படிக்க | ட்விட்டரில் உரையாடலைப் புரிந்துகொள்ள என்ன தேவை? ட்விட்டர் ஏபிஐ லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News