புதுடெல்லி: இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலி செயலிழந்தது. பிறகு இரவு 9.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டன. இந்திய நேரப்படி சுமார் 8 மணியளவில் டிவிட்டரின் சேவைகள் முடங்கின. பிறகு 9.07 PM IST வரை டிவிட்டர் செயல்படவில்லை. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போனார்கள்.  
இந்தியாவில் ட்விட்டர் செயலிழந்தது தொடர்பாக8.30 PM IST க்குள், சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் டவுன் டெக்டரில் புகாரை பதிவு செய்தனர். DownDetector தரவின் அடிப்படையில், பயனர்கள் தங்கள் ஊட்டங்களை புதுப்பிக்க முடியவில்லை. தளத்தின் பயன்பாட்டு பதிப்புகள் மட்டுமல்ல, வலைத்தளத்தை பயன்படுத்த முடியாமல் அவதியுற்றனர். அவர்கள் பின்தொடரும் நபர்களின் சமீபத்திய செய்திகள், போக்குகள் மற்றும் ட்வீட்களையும் பார்க்க முடியவில்லை. 
அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் மட்டுமல்ல, டெஸ்க்டாப் பயனர்களும் பெரும் சிக்கல்களை அனுபவித்தனர்.  
ட்விட்டர் செயலிழந்து போனதற்கான உடனடி காரணம் எதுவும் தெரியல்லை, நிறுவனத்தின் தரப்பில் இருந்து சிக்கல் சரி செய்யப்பட்டது. சிலர் தங்களுடைய சாதனங்களில் தான் பிரச்சனை என்று நினைத்து, செயலியை மீண்டும் நிறுவ முயற்சித்தார்கள், ஆனால், செயலியில் எந்த சிக்கலும் இல்லாததால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை.
வழக்கமாக, இதுபோன்ற செயலிழப்புகள் நீண்ட காலம் நீடிக்காது. சேவையக சிக்கலை ட்விட்டர் தான் சரிசெய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மற்றுமொரு முறை இதுபோன்ற செயலிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கவலையாக இருக்கிறதா? DownDetectorக்கு புகாரளியுங்கள் போதும்.  டிவிட்டர் செயல்பாடுகள் முடங்கிப் போனது குறித்து டிவிட்டர் நிறுவனம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. டிவிட்டர் செயல்படவில்லை என்ற முதல் செய்தி 7.40 PM IST க்கு வெளியானது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR