பயனர் அனுபவத்தை மேம்படுத்த Whatsapp பல அம்சங்களில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் இரண்டை அண்ட்ராய்டு பயனர்களுக்காக விரைவில் வெளியிட Whatsapp திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Whatsapp டிராக்கர் WABetaInfo படி, உடனடி செய்தியிடல் தளம் வியக்கத்தக்க ஒரு அம்சத்தில் செயல்பட்டு வருகிறது. இது தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் குழுக்களில் உள்ள செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அழிந்து போக அனுமதிக்கும் என கூறப்படுகிறது.


இந்த அம்சம் கடந்த காலத்திலும் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும், இப்போது அது காலாவதியான செய்திகள் என்று அழைக்க மறு பிரவேசம் எடுத்து வருகிறது. முன்னதாக, இந்த அம்சம் காணாமல் போகும் செய்திகள் மற்றும் செய்திகளை நீக்க கண்டறியப்பட்டது. எனினும் தற்போது வெளிவரும் அம்சம் Whatsapp அம்சத்திலும் சில மாற்றங்களைச் செய்யும் என நம்பப்படுகிறது.


அறிக்கையின்படி, குழு நிர்வாகிகளுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும். இதன் பொருள், குழு நிர்வாகிகளால் மட்டுமே மற்ற குழு உறுப்பினர்களால், குழுவில் காணாமல் போகும் செய்திகளைப் பகிர முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் குழு நிர்வாகிக்கு செய்திகள் மறைந்து போகும் கால அளவையும் நிர்ணயிக்கவும் அனுமதிக்கும். அதாவது Whatsapp குழு நிர்வாகிகள் தங்கள் குழுவின் செய்திகளை ஒரு நாள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் இடைவெளியில் தானாக அழிக்க இது வழிவகுக்கும்.


இது தவிர, பல ஸ்மார்ட்போன்களில் ஒரே கணக்கைத் திறக்க பயனர்களை அனுமதிக்கும் மற்றொரு அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இப்போதைக்கு, பயனர்கள் வேறொரு சாதனத்தில் உள்நுழைந்தால் முதன்மை ஸ்மார்ட்போனிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.


ஒரு பயனர் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை மற்றொரு சாதனத்தில் சேர்க்கும்போது, ​​குறியாக்க விசை மாறும், மேலும் இது அரட்டையில் அறிவிக்கப்படும் என்று வலைப்பதிவு கூறுகிறது. 


இந்த மாற்றங்கள் Android பதிப்பிற்கான 2.20.110-ல் கிடக்கும் எனவும் WABeta தகவல் தெரிவிக்கிறது.