அட்டகாசமான Redmi Note 10T 5G-ன் விலை வெறும் ரூ.999: அசத்தும் பிளிப்கார்ட்
Flipkart Mi Fan Festival விற்பனை ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி வரை தொடரும். இந்த விற்பனையில், Redmi Note 10T 5G-ஐ வெறும் 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்டில் எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல் (Mi Fan Festival) விற்பனை நடந்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் சியோமியின் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம்.
ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையின் மூலம் ரெட்மியின் சிறந்த ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 10டி 5ஜியை வெறும் ரூ.999க்கு வாங்கலாம். இந்தச் சலுகையைப் பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போனில் பம்பர் தள்ளுபடி
சந்தையில் ரெட்மி நோட் 10டி 5ஜி போனின் விலை ரூ.16,999 ஆகும். எனினும், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை 17% தள்ளுபடியுடன் ரூ.13,999 க்கு வாங்கலாம் இதை வாங்கும் போது, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்ட் கொண்டு பணம் செலுத்தினால், ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த போனின் விலை ரூ.12,999 ஆக குறையும்.
மேலும் படிக்க | புதிய iPhone SE 3-ஐ 28,900 ரூபாய்க்கு வாங்க அறிய வாய்ப்பு!
புத்தம் புது ரெட்மி நோட் 10டி 5ஜி போனை வெறும் 999 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?
ரெட்மி நோட் 10டி 5ஜி-ன் இந்த ஃபோனில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதாவது ஒரு பரிமாற்ற சலுகையும் உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த 5ஜி போனை வாங்கினால், 13 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த சியோமி ஸ்மார்ட்போனை ரூ.13,999-க்கு பதிலாக வெறும் ரூ.999-க்கு வாங்க முடியும்.
ரெட்மி நோட் 10டி 5ஜி: அம்சங்கள்
ரெட்மியின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனில், நீங்கள் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்தைப் பெறுவீர்கள். மீடியாடெக் டைமென்சன் 700 சிப்செட்டில் பணிபுரியும் இந்த ஃபோன் 6.56-இன்ச் முழு எச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.
இந்த இரட்டை சிம் ஸ்மார்ட்போனில், பயனர்களுக்கு 8எம்பி முன் கேமரா மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்படும். இதில் 48எம்பி பிரதான சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க | ஐபோனின் 13 மாடல் போன் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR