YouTube ரகசியம்! இதையெல்லாம் ஈஸியாக மறைக்கலாம்
How to Clear YouTube Search History: யூடியூப்பில் நீங்கள் தேடும் தகவல்களை யாராவது பார்த்துவிடுவார்கள் என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
YouTube Search History: உலகம் முழுவதும் வீடியோ பார்ப்பதற்கு பயன்படும் மிகவும் பிரபலமான செயலியாக யூ டியூப் இருக்கிறது. கம்பயூட்டர், லேப்டாப், மொபைல் என எதுவாக இருந்தாலும், யூ டியூப்பில் வீடியோவை பார்க்கலாம். அதேநேரத்தில் நீங்கள் பார்க்கும் யூடியூப் தகவல்கள் தொடர்பான ஹிஸ்டிரியும் உங்கள் சாதனத்தில் அழியாமல் அப்படியே இருக்கும். ஒரு சில நேரங்களில் இந்த ஹிஸ்டிரி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தும் கம்பயூட்டர் அல்லது மொபலை யாரேனும் வாங்கிப் பார்க்கும்போது, யூடியூப் ஹிஸ்டிரியை பார்க்க வாய்ப்பிருக்கிறது.
அப்போது, நீங்கள் என்னென்ன தகவல்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. சில தகவல்கள் உங்களுக்கு தேவை என்பதற்காக பார்த்திருப்பீர்கள். ஆனால், அது பிறருக்கு தவறாக தெரியலாம். அல்லது நீங்கள் பார்த்த தகவல்களைக் கொண்டு உங்களை சீண்டவோ அல்லது கேலி செய்யவோ வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்பினால், யூ டியூப் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது.
அதாவது தானாகவே ஹிஸ்டிரியை டெலிட் செய்து கொள்ளும் ஆப்சனெல்லாம் இருக்கிறது. இப்படியான அதில் இருக்கும் அம்சங்களை தெரிந்து கொண்டால், யூடியூப் ஹிஸ்டிரியைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளவே தேவையில்லை. சங்கடமான சூழ்நிலைகளும் ஏற்படாது.
மேலும் படிக்க | கூகுள் பே-வில் UPI ஐடியை மாற்றுவது எப்படி?
YouTube ஹிஸ்டிரியை தானாக நீக்குவது எப்படி?
முதலில் யூடியூப் பக்கத்துக்கு சென்று, இடதுபுறத்தில் உள்ள ஹிஸ்டரி செட்டிங்ஸை கிளிக் செய்யவும். அதன் பிறகு அனைத்து வரலாற்றையும் நிர்வகி (Manage all history) என்பதற்குச் செல்லவும். அதில், auto-delete history என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது, 3 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை என கால அளவு காட்டும். அந்த கால அளவுகளை தேர்தெடுக்கும்போது, ஹிஸ்டிரி தானாகவே அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிட்டாகிவிடும். மேனுவலாகவும் ஹிஸ்டிரியை டெலிட் செய்யலாம்.
மேலும் படிக்க | ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் டாப் 5 லேப்டாப்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ