Vi Unlimited Recharge: அலைமோதும் வாடிக்கையாளர்கள், நீங்க வாங்கிட்டீங்களா?
Vi Unlimited Recharge: ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், பயனர்கள் Vi இன் இந்த சிறப்புத் திட்டத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.
வோடஃபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டம்: வோடஃபோன் ஐடியா அதன் மலிவான மற்றும் சக்திவாய்ந்த ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல பிரிவுகளில் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. பொதுவாக, ப்ரீபெய்டு இணைப்பு பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆகையால், இப்போது வோடா ஐடியா ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு முறை ரீசார்ஜ் செய்த பிறகு, ஒரு வருடம் முழுவதும் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக இருக்கலாம்.
நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதன் விவரங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Vi இன் சக்திவாய்ந்த ரீசார்ஜ் திட்டம்
வோடா ஐடியாவின் ஒரு மிக அற்புதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பற்றி இந்த பதிவில் பயனர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் விலை ரூ. 3099 ஆகும். இந்த விலை அதிகமாக இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, நீங்கள் 365 நாட்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு பல நன்மைகள் கொடுக்கபட்டுள்ளன.
மேலும் படிக்க | மிகக்குறைந்த விலையில் 5G போன்: விரைவில் அசத்த வருகிறது Samsung Galaxy A14 5G
முதலில், இந்த திட்டத்தில், ஆண்டு முழுவதும் அதாவது 365 நாட்களுக்கான வேலிடிட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மிகப்பெரிய கால அளவாகும். வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, பயனர்கள் மதியம் 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வரம்பற்ற இணையத்தைப் பயன்படுத்தலாம். மேலும் இது உங்கள் 2ஜிபி டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது.
இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 365 நாட்களுக்கு வரம்பற்ற இணையத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் செய்யலாம். இந்த நன்மைகளைத் தவிர, இந்தத் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான வசதியும் உள்ளது. இந்த நன்மைகளுடன், வாடிக்கையாளர்களுக்கு வார இறுதி டாடா ரோல்ஓவர் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆகிய பிரத்யேக பலன்களும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | ஒரு வருசத்துக்கு கவலையில்லை.. ஜியோவின் இந்த 2 திட்டங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ