பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Vodafone-Idea: திடீரென நிறுத்தப்பட்ட 3 ரீசார்ஜ் திட்டங்கள்
இப்போது நிறுத்தப்பட்டுள்ள வோடபோன் ஐடியாவின் ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம், 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்கியது.
Vodafone Idea (Vi) இந்த வார தொடக்கத்தில் அதன் 601 ரூபாய் மற்றும் 701 ரூபாயின் Disney + Hotstar ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்தியது. இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களின் விலை ரூ.501 மற்றும் ரூ.901 ஆக இருந்தது.
இப்போது, வோடஃபோன் ஐடியா (Vi) அதன் இணையதளத்தில் இருந்து ரூ.501 திட்டத்தையும் நீக்கியுள்ளது. அதாவது தங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்-ஐ பெற விரும்பும் பயனர்கள் இனி ரூ.901 மற்றும் ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டங்களை வாங்க வேண்டும்.
இப்போது நிறுத்தப்பட்டுள்ள வோடபோன் ஐடியாவின் ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம், 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்கியது.
இந்த வார தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ.601 மற்றும் ரூ.701 ஆகும். ரூ.601 ப்ரீபெய்ட் திட்டமானது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட அணுகல் மற்றும் 75ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்கியது. ரூ.701 ப்ரீபெய்ட் திட்டத்தில், தினசரி 3ஜிபி டேட்டா 56 நாட்களுக்கான செல்லுபடி ஆகியவை கிடைத்தது. இவற்றுடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைத்தன.
Vi ரூ.901 மற்றும் ரூ.3055 திட்டங்களில் என்ன சிறப்பு
Vi அதன் ரூ.501, ரூ.601 மற்றும் ரூ.701 ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிய பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பலன்களை வழங்கும் இரண்டு திட்டங்கள் தற்போது உள்ளன. Vi வழங்கும் ரூ.901 ப்ரீபெய்ட் திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும். இது Disney+ Hotstar மொபைல் பலன்களுக்கான அணுகலுடன் வருகிறது. Vi இல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பலன்களை வழங்கும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமான ரூ.3055 உள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
ALSO READ | Jio, Airtel, Vi: உங்களுக்கு ஏற்ற மலிவான ரீசார்ஜ் திட்டங்களின் விவரம் இதோ
ஏர்டெல்லும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது
ஏர்டெலும் (Airtel) அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் நன்மைகளை குறைத்துள்ளது. ஏர்டெல் ரூ.155ல் துவங்கும் அதன் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுடனும் தனது பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் பலன்களை வழங்குகிறது. எனினும், ரூ.599 மற்றும் ரூ.699 விலையுள்ள திட்டங்களில் நிறுவனம் சிறப்பு ஸ்ட்ரீமிங் பலன்களை வழங்குகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் நன்மைகளுக்கான சந்தாவை வழங்குகிறது மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
Vi க்கு முன் ஜியோ 4 திட்டங்களையும் நிறுத்தியது
வருடாந்திர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் ரூ.499, ரூ.666, ரூ.888 மற்றும் ரூ.2,499 ஆகிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ (Jio) நிறுத்தியது. ஏர்டெல் நிறுவனமும் ரூ.398, ரூ.499 மற்றும் ரூ.558 திட்டங்களை நிறுத்திவிட்டது. இவற்றில் முன்னர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைத்தது.
ALSO READ | Vodafone-Idea அறிமுகம் செய்த 4 புதிய திட்டங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR