நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் தங்களின் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியுள்ளன.
விலை உயர்வுக்குப் பிறகு, இந்த நிறுவனங்களின் சில திட்டங்களின் பலன்களில் சில வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. ரூ.250-க்கும் குறைவான விலையில் இருக்கும் இந்த மூன்று நிறுவனங்களின் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வி ப்ரீபெய்ட் திட்டங்கள்
இன்று நாம் ஜியோ (Jio), ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிய சில முக்கிய அம்சங்களைப் பற்றி பார்க்கலாம். இவற்றின் விலை ரூ. 250 க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து நிறுவனங்களின் ரூ.250-க்கும் குறைவான திட்டங்களில் தினசரி டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங் பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். எனினும், சில கூடுதல் நன்மைகளில் வித்தியாசம் காணப்படுகிறது. எந்த நிறுவனம் அதன் திட்டத்தில் என்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை கீழே காணலாம்.
ரூ.250-க்கு கீழ் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோவில் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இதில் 20 நாட்களுக்கு தினமும் 1ஜிபி இணைய வசதி, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். நீங்கள் ரூ.179 செலுத்தினால், 24 நாட்களுக்கு அதே பலன்களைப் பெறலாம். மேலும் ரூ.209-க்கு 28 நாட்களுக்கு இந்தப் பலன்களைப் பெறலாம்.
இது தவிர, 250 ரூபாய்க்கும் குறைவான ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் சில தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன, சில தினசரி 2 ஜிபி இணைய வசதியை வழங்குகின்றன.
ALSO READ | Jio சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது
ரூ.250க்கு கீழ் உள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல்லின் (Airtel) ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர், வரம்பற்ற வாய்ஸ் காலிங், மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் மொத்தம் 1ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். ஏர்டெல்லின் ரூ.179 திட்டத்தில், 28 நாட்களுக்கு மொத்தம் 2ஜிபி இணையம், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
ரூ.250க்கு கீழ் உள்ள Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்
வோடபோன் ஐடியாவின் ரூ.179 திட்டத்தில், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் மொத்தம் 2ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும். Vi இன் ரூ.199 திட்டத்தில், 18 நாட்களுக்கு தினமும் 1ஜிபி இணைய வசதி, அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
இப்படி முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வித திட்டங்களைக் (Prepaid Plans) கொண்டுள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் பயன்களைப் பெறலாம்.
ALSO READ | Jio-Airtel-Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்! எந்த திட்டம் சிறந்தது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR