Vodafone Idea: 150 ஜிபி போனஸ் டேட்டா: வோடோஃபோன் ஐடியாவின் சூப்பர் பிளான்
வோடாபோன் ஐடியா நிறுவனம் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Vodafone Idea நிறுவனம் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 150GB போனஸ் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெய்டு சிம் வாங்கி, இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே அவர்களுக்கு போனஸ் டேட்டா வழங்கப்படும். புதிய சிம் வாங்கும் போது போனஸ் டேட்டாவை வழங்கும் ஒரே திட்டம் இதுதான். வோடபோன் ஐடியாவிடமிருந்து ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பெற்றால், நீங்கள் பெறும் மற்ற நன்மைகளையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Apple iPhone 14, iPhone 14 Plus அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ
ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்
வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் என்டிரி லெவல் ரூ.399 போஸ்ட்பெய்டு திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது 40ஜிபி டேட்டாவுடன் 150ஜிபி போனஸ் டேட்டாவைப் பெறுகிறார்கள். இதன் மூலம் வாடிக்கையாள் ஒட்டுமொத்தமாக 190 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்
மற்ற பலன்கள் என்ன?
இதனுடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன. Vi Movies மற்றும் TV VIP சந்தாவை கூடுதலாக வாடிக்கையாளர்கள் இலவச சந்தாவைப் பெறுவார்கள். இதனுடன், Vi செயலியில் ஆறு மாதங்களுக்கு விளம்பரமில்லா ஹங்காமா மியூசிக் உள்ளது. நீங்கள் OTT (ஓவர்-தி-டாப்) உள்ளடக்கத்தைப் பயன்படுத்த விரும்புபவராக இருந்தால், இந்தத் திட்டத்தில் நீங்கள் இலவச ZEE5 பிரீமியத்தையும் பெறுவீர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர விலையான ரூ.399க்கு வரி இல்லை. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் குறித்து வோடாஃபோன் ஐடியா தெரிவித்திருக்கும் பதிவில், 93 சதவீத பயனர்கள் இந்த திட்டத்தை விரும்புகிறார்கள் என கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ